என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறந்த போலீஸ் நிலையம்"

    • சிறந்த போலீஸ் ஸ்டேஷன்கள் தேர்வு செய்யும் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • சென்னையில் நடக்கும் குடியரசு தின விழாவில், விருது வழங்கப்படும்.

    திருப்பூர் : 

    தமிழகத்தில் சிறந்த போலீஸ் ஸ்டேஷனாக, திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில், 2022ம் ஆண்டுக்கான சிறந்த போலீஸ் ஸ்டேஷன்கள் தேர்வு செய்யும் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதில், திருப்பூர் மாநகரில் உள்ள திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் முதலாவதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இரண்டாவதாக, திருச்சி மாநகரில், போர்ட் போலீஸ் ஸ்டேஷன், மூன்றாவதாக திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல் தாலுகா போலீஸ் ஸ்டேஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டி.ஜி.பி., அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. சென்னையில் நடக்கும் குடியரசு தின விழாவில், விருது வழங்கப்படும். மேலும், 2020ம் ஆண்டில் நடந்த போட்டியில், திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது, இரண்டாவது முறையாக, மாநகர போலீசில் மற்றொரு ஸ்டேஷன் தேர்வாகி உள்ளது.

    தென் மண்டல அளவில் சிறந்த போலீஸ் நிலையமாக திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையம் தேர்வு செய்யப்பட்டது
    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் தென் மண்டல அளவில் சிறப்பாகச் செயல்படும் போலீஸ் நிலையங்களை அங்கீகரிக்க ஒவ்வொரு ஆண்டும் பல குழுக்கள் அமைக்கப்படுகிறது.

    அந்தக் குழுக்கள் போலீஸ் நிலையங்களுக்குச் சென்று காவல் நிலையத்தின் பராமரிப்பு, சுற்றுப்புறச் சூழல், மனுதாரர்களிடம் காவலர்கள் நடந்துகொள்ளும் அணுகுமுறை, வழக்கு விசாரணைகளில் தண்டனை பெற்றுத் தரும் விவரம், நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்த விவரம், வழக்கு விவரங்களை ஆன்லைனில் அப்டேட் செய்வது உள்ளிட்ட பல்வேறு தரவுகளை ஆய்வு செய்கின்றன.

    மேலும், அந்த போலீஸ் நிலையங்களைத் தொடர்ந்து கண்காணித்து, சிறந்த போலீஸ் நிலையத்தைத் தேர்ந்தெடுக்கின்றன. அதன்படி 2021-ம் ஆண்டுக்காக தென் மண்டலத்தில் உள்ள போலீஸ்  நிலையங்களை ஆய்வு செய்ததில் திண்டுக்கல் தாலுகா  போலீஸ் நிலையம் தென்மண்டல அளவில் சிறந்த  போலீஸ் நிலையமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

    இதனால் திண்டுக்கல் போலீசார் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பாலாண்டி கூறும்போது நாங்கள் போலீஸ் உயரதிகாரிகளின் வழிகாட்டுதல் படி எங்கள் கடமைகளை விரைந்து முடித்து வருகிறோம்.மேலும் காவலர்கள் உண்மையான அர்ப்பணிப்பு உணர்வுடன் பொதுமக்களிடையே கண்ணியமான முறையில் நடந்து கொள்கின்றனர்.

    விருது பெற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படவில்லை.
    மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பணியாற்றினோம். தற்போது தென் மண்டல அளவில் சிறந்த போலீஸ் நிலையமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.இது எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
    ×