தமிழகத்தில் சிறந்த போலீஸ் நிலையமாக திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையம் தேர்வு

சிறந்த போலீஸ் ஸ்டேஷன்கள் தேர்வு செய்யும் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் நடக்கும் குடியரசு தின விழாவில், விருது வழங்கப்படும்.
தமிழகத்தில் சிறந்த போலீஸ் நிலையமாக திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையம் தேர்வு
Published on

திருப்பூர் : 

தமிழகத்தில் சிறந்த போலீஸ் ஸ்டேஷனாக, திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 2022ம் ஆண்டுக்கான சிறந்த போலீஸ் ஸ்டேஷன்கள் தேர்வு செய்யும் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், திருப்பூர் மாநகரில் உள்ள திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் முதலாவதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, திருச்சி மாநகரில், போர்ட் போலீஸ் ஸ்டேஷன், மூன்றாவதாக திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல் தாலுகா போலீஸ் ஸ்டேஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டி.ஜி.பி., அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. சென்னையில் நடக்கும் குடியரசு தின விழாவில், விருது வழங்கப்படும். மேலும், 2020ம் ஆண்டில் நடந்த போட்டியில், திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது, இரண்டாவது முறையாக, மாநகர போலீசில் மற்றொரு ஸ்டேஷன் தேர்வாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com