என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் மருந்தகம்"

    • பிற மருந்து கடைகளை விட 90 சதவீதம் வரை விலை குறைவாக விற்கப்படுகிறது.
    • இதன் மூலம் பொது மக்களுக்கு பெருமளவில் மருத்துவ செலவு குறைந்துள்ளது.

    மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    அனைவருக்கும் மலிவு விலையில் தரமான மருந்துகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், பிரதமர் மலிவு விலை மருந்துகள் திட்டம் கடந்த 2008 ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் அடிப்படையில் கடந்த 2017ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 3,000 மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டன.

    கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மொத்தம் 6,000 மக்கள் மருந்தக விற்பனை நிலையங்கள் என்ற இலக்கு எட்டப்பட்டது. கடந்த நிதியாண்டில் மக்கள் மருந்தக விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை 8,610 ஆக இருந்தது. தற்போது அது 9,000 ஆக அதிகரித்துள்ளது. இந்த மருந்தகங்களில் 1,759 மருந்துகள் மற்றும் 280 அறுவை சிகிச்சை சாதனங்கள் மலிவான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

    மேலும் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகளின் விலை, பிற மருந்து கடைகளை ஒப்பிடும் போது இந்த மருந்தகங்களில் அதிகபட்சமாக 90 சதவீதம் வரை குறைவாக விற்கப்படுகிறது. இதன் மூலம் பொதுமக்களுக்கு சுமார் ரூ.5,300 கோடி ரூபாய் அளவிற்கு மருத்துவ செலவு குறைந்துள்ளது.

    மேலும் பிரதமரின் மலிவு விலை மருந்து திட்டம், வடகிழக்கு மாநிலங்கள், இமயமலைப் பகுதிகள், தீவுப் பகுதிகள் மற்றும் பின்தங்கிய மாவட்டங்களிலும் மக்கள் மருந்தகம் திறக்கப்படுவதற்கும், பெண் தொழில் முனைவோர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவைச் சேர்ந்தவர்கள் இந்த தொழிலில் ஈடுபடுவதற்கும் உதவி வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மே மாதத்தில் முதல் முறையாக மக்கள் மருந்தகங்களில் மருந்துகளின் விற்பனை ரூ.100 கோடியைத் தாண்டியுள்ளது.
    டெல்லி:

    சாதாரண மக்களுக்கு குறிப்பாக ஏழைகளுக்கு மலிவு விலையில் தரமான மருந்துகளை வழங்குவதற்கான தொலைநோக்குப் பார்வையுடன், பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தக திட்டம்  நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

    இந்த திட்டத்தின் கீழ், நாட்டின் 739 மாவட்டங்களில் இந்த மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது வரை இந்த திட்டத்தின் கீழ் இயங்கும் மருந்து கடைகளின் எண்ணிக்கை 8735 ஆக உள்ளது.  2024-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த மருந்தகங்களின் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது.

    இந்த மாதத்தில் மக்கள் மருந்தகங்களில் அதிகபட்சமாக ரூ. 100 கோடிக்கு மருந்து விற்பனை  செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் நாட்டின் குடிமக்களுக்கு ரூ.600 கோடி அளவுக்கு பணம் மிச்சமாகியுள்ளது. 

    இத்திட்டத்தின் கீழ் அத்தியாவசிய மருந்துகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் பிரிவு உறுதி பூண்டுள்ளது. 

    மக்கள் மருந்தகங்கள் மூலம் தரமான மருந்துகளை வழங்குவதற்காக 406 மாவட்டங்களில் உள்ள 3579 வட்டாரங்களுக்கு புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

    சிறிய நகரங்கள் மற்றும் வட்டாரங்களின் தலைமையகங்களில் வசிப்பவர்கள் மக்கள் மருந்தகங்களை திறக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகையாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×