என் மலர்
நீங்கள் தேடியது "கபாடி"
- தென்னிந்திய அளவிலான கபாடி போட்டியை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்
- 33 ஆண்டுகளுக்கு பிறகு இந்த போட்டி நடைபெறுகிறது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆ.கொக்குளம் கிராமத்தில் தென்னிந்திய அளவிலான கபாடி போட்டி நடந்தது.
33 ஆண்டுகளுக்கு பிறகு இந்த போட்டி நடைபெறுகிறது. இதில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 133 அணிகள் பங்கேற்கின்றன.
போட்டியை முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். அவருக்கு கிராம மக்கள் சார்பில் மாலை அணிவித்து வீரவாள் பரிசாக வழங்கப்பட்டது.
முதலாவதாக ஆ.கொக்குளம் மற்றும் கிண்ணிமங்கலம் அணியினர் பங்கேற்ற கபடி போட்டி நடந்தது.நாளை காலை இறுதிப் போட்டி நடைபெறுகிறது. முதல் பரிசாக ரூ.ஒரு லட்சமும், 2-ம் பரிசாக ரூ.80 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ. 60 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.
போட்டியை காண சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.நிகழ்ச்சியில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






