என் மலர்
நீங்கள் தேடியது "tag 176312"
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய கபில்சிபல் சமாஜ்வாடி கட்சி ஆதரவுடன் உத்தரபிரதேச மேல்சபை எம்.பி. பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.
லக்னோ:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் கபில்சிபல்.
காங்கிரஸ் தலைமையை விமர்சித்த 23 அதிருப்தி தலைவர்களில் இவர் முக்கியமானவர் ஆவார். காங்கிரஸ் கட்சியின் நடைமுறையில் மாற்றம் தேவை, காந்தி குடும்பத்தை சேர்ந்தவர் யாரும் தலைமை வகிக்க கூடாது என்று கபில்சிபல் தெரிவித்து இருந்தார்.
பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததில் இருந்தே அவர் காங்கிரஸ் தலைமையை விமர்சித்து வந்தார். சமீபகாலமாகவே சோனியா காந்தியை அவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.
2024-ம் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு சோனியா காந்தி 3 குழுக்களை நேற்று நியமித்தார். இதில் எந்த குழுவிலும் கபில்சிபல் பெயர் இடம் பெறவில்லை. மற்ற அதிருப்தி தலைவர்களான குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.
இந்த நிலையில் கபில்சிபல் காங்கிரஸ் கட்சியில் இருந்து திடீரென விலகி உள்ளார்.
இதைத் தொடர்ந்து கபில்சிபல் சமாஜ்வாடி கட்சி ஆதரவுடன் உத்தரபிரதேச மேல்சபை எம்.பி. பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், அந்த கட்சியின் எம்.பி. ராமகோபால் யாதவ் ஆகியோர் முன்னிலையில் அவர் மனு தாக்கல் செய்தார்.
பின்னர் கபில்சிபல் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான கடந்த 16-ந்தேதியே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி விட்டேன். எனது ராஜினாமா கடிதத்தை தலைமைக்கு அனுப்பி விட்டேன்.
நான் சமாஜ்வாடி கட்சி ஆதரவுடன் சுயேட்சையாக மேல்சபைக்கு மனு தாக்கல் செய்துள்ளேன். நாட்டில் சுயேட்சையாக குரல் கொடுக்க எப்போதும் விரும்பினேன். சுதந்திரமான குரலாக இருப்பதே முக்கியம்.
இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து இந்தியாவின் பொருளாதாரத்தையே நாசமாக்கி இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் கூறியுள்ளார். #KapilSibal #NarendraModi
புதுடெல்லி:
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வராகடன்களை அதிகமாக உருவாக்கி விட்டதால் நாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி கூறியிருந்தார்.
இதுசம்பந்தமாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கபில்சிபல் கூறியதாவது:-
பிரதமர் மோடி விரக்தியில் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுகளை கூறுகிறார். ஆதாரம் இல்லாத தகவல்களை உரக்க கூறினால் அது மக்களிடம் எடுபட்டுவிடும் என அவர் நினைக்கிறார்.
முதலில் இதுசம்பந்தமான ஆதாரங்களை மோடி வெளியிடட்டும். மோடி தான் கடுமையான உழைப்பாளி என்று கூறிக்கொண்டிருக்கிறார். ஆனால் அவர் ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து இந்தியாவின் பொருளாதாரத்தையே நாசமாக்கிவிட்டார்.
யாருக்கும் வேலை வாய்ப்பு இல்லை. அதுக்கான தீர்வையும் காணவில்லை. பாரதிய ஜனதா கட்சி தான் நாட்டின் செயல்படாத சொத்தாக இருந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு கபில்சிபல் கூறினார். #KapilSibal #NarendraModi