என் மலர்

  செய்திகள்

  இந்திய பொருளாதாரத்தை மோடி நாசமாக்கிவிட்டார் - கபில்சிபில் கடும் தாக்கு
  X

  இந்திய பொருளாதாரத்தை மோடி நாசமாக்கிவிட்டார் - கபில்சிபில் கடும் தாக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து இந்தியாவின் பொருளாதாரத்தையே நாசமாக்கி இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் கூறியுள்ளார். #KapilSibal #NarendraModi
  புதுடெல்லி:

  காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வராகடன்களை அதிகமாக உருவாக்கி விட்டதால் நாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி கூறியிருந்தார்.

  இதுசம்பந்தமாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கபில்சிபல் கூறியதாவது:-

  பிரதமர் மோடி விரக்தியில் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுகளை கூறுகிறார். ஆதாரம் இல்லாத தகவல்களை உரக்க கூறினால் அது மக்களிடம் எடுபட்டுவிடும் என அவர் நினைக்கிறார்.

  முதலில் இதுசம்பந்தமான ஆதாரங்களை மோடி வெளியிடட்டும். மோடி தான் கடுமையான உழைப்பாளி என்று கூறிக்கொண்டிருக்கிறார். ஆனால் அவர் ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து இந்தியாவின் பொருளாதாரத்தையே நாசமாக்கிவிட்டார்.

  யாருக்கும் வேலை வாய்ப்பு இல்லை. அதுக்கான தீர்வையும் காணவில்லை. பாரதிய ஜனதா கட்சி தான் நாட்டின் செயல்படாத சொத்தாக இருந்து கொண்டிருக்கிறது.

  இவ்வாறு கபில்சிபல் கூறினார்.  #KapilSibal #NarendraModi
  Next Story
  ×