search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "T20 womens world cup"

    • உண்மையான போர்வீரர்கள் என்பதை இந்திய மகளிர் அணியினர் காட்டினர்.
    • அரையிறுதி போட்டியில் இந்தியா 5 ரன் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது.

    கேப்டவுன்:

    பெண்கள் உலகக் கோப்பை 8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் கேப்டவுனில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் மல்லுக்கட்டின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 4விக்கெட் இழப்பிற்கு172 ரன்கள் குவித்தது.

    173 ரன்கள் இலக்குடன் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 167 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 5 ரன் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்து இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது.

    5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா தொடர்ந்து 7-வது முறையாக இறுதி சுற்றை எட்டியிருக்கிறது. வெற்றியின் விளிம்புக்கு வந்து சறுக்கிய இந்திய அணி இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை. அந்த சோகம் இந்த முறையும் நீடிக்கிறது.

    இந்நிலையில் உலகக்கோப்பையில் இந்திய மகளிர் அணிக்கு ஆறுதல் கூறும் விதமாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்:-

    ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு கடுமையான தோல்வி. ஆனால் களத்தில் எங்கள் பெண்களின் உற்சாகத்திற்காக நாங்கள் பெருமைப்பட முடியாது. குழுவினர் தங்களால் முடிந்த அனைத்தையும் அளித்து. அவர்கள் உண்மையான போர்வீரர்கள் என்பதைக் காட்டினர். நாங்கள் உங்களுடன் நிற்கிறோம். நீல நிற பெண்களே.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    ×