search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suriya Siva"

    • எனது ராஜினாமா இன்னும் ஏற்கப்படவில்லை.
    • நான் தற்போது வரை பா.ஜ.க. பிரமுகராகவே தொடந்து வருகிறேன்.

    திருச்சி :

    பா.ஜனதா கட்சியில் ஓ.பி.சி. அணி மாநில செயலாளராக இருந்த சூர்யா சிவா கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்தநிலையில் சூர்யா சிவா திருச்சியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-

    மதுரையை சேர்ந்த வரிச்சூர் செல்வம் காயத்ரி ரகுராமுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நான் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டேன். அதனை நீக்கும்படி வரிச்சூர் செல்வம் கேட்டுக்கொண்டதால் நான் நீக்கினேன். ஆனால் வரிச்சூர் செல்வமோ, நான் அவரிடம் மன்னிப்பு கேட்டதாக சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

    வரிச்சூர் செல்வத்திடம் நான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை. அவர் தான் என்னிடம் மன்னிப்பு கேட்டு வாட்ஸ்-அப்பில் வாய்ஸ் மெசேஜ் (ஆடியோவை வெளியிட்டார்) அனுப்பியுள்ளார்.

    நான் தற்போது வரை பா.ஜ.க. பிரமுகராகவே தொடந்து வருகிறேன். எனது ராஜினாமா இன்னும் ஏற்கப்படவில்லை. 2026-ம் ஆண்டு வரை அண்ணாமலை தான் பா.ஜ.க. தலைவராக இருப்பார். அப்போது தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க. தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும். அப்போது அண்ணாமலை முதல்-அமைச்சராக இருப்பார்.அதனை தொடர்ந்து இன்னும் 25 ஆண்டுகளுக்கு அவர் தான் பா.ஜ.க. தலைவராக இருப்பார். நான் அண்ணாமலையின் 'ஏ' டீம் தான். அண்ணாமலைக்கு எதிராக எந்த விமர்சனம் வந்தாலும் அதற்கு முதலாவதாக நான் பதில் அளிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×