search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Supply of teak"

    • கபிலர்மலை வட்டார விவசாயிகள் பாரம்பரிய விதை நெல் ரகங்கள் தேவைக்கு கபிலர்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம்.
    • 4903 தேக்குமரக் கன்றுகள் நாமக்கல் மாவட்ட வனத்துறையால் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய தயார் நிலையில் உள்ளது.

    பரமத்தி வேலூர்:

    கபிலர்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் தூயமல்லி 50 கிலோ மற்றும் கருப்பு கவுனி 30 கிலோ ஆகிய பாரம்பரிய நெல் ரகங்கள் இருப்பு உள்ளது. எனவே, கபிலர்மலை வட்டார விவசாயிகள் பாரம்பரிய விதை நெல் ரகங்கள் தேவைக்கு கபிலர்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம்.

    மேலும் தமிழ்நாடு அரசின் வேளாண்மை-உழவர் நலத்துறையின் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கத்தின் கீழ் கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு ரூ.15 மதிப்புடைய தரமான 4903 தேக்குமரக் கன்றுகள் நாமக்கல் மாவட்ட வனத்துறையால் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய தயார் நிலையில் உள்ளது.

    இந்த மரக்கன்றுகள் வரப்பில் நடவு செய்ய ஒரு ஏக்கருக்கு, ஒரு விவசாயிக்கு 50 கன்றுகளுக்கு மிகாமலும், விவசாய நிலங்களில் நடவு செய்ய ஒரு ஏக்கருக்கு, ஒரு விவசாயிக்கு 160 கன்றுகளுக்கு மிகாமலும் வழங்கப்படும். கூடுதலாக, நடவு செய்த 2-ம் ஆண்டு முதல் 4-ம் ஆண்டு வரை நல்ல முறையில் பராமரிக்கப்படும் தேக்கு கன்று ஒன்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ 7 வீதம், 3 ஆண்டுகளுக்கு ரூ 21 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

    அறுவடைக்கு வரும் வளர்ந்த மரக்கன்றுகளை வெட்ட வருவாய்த்துறையின் அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்திட உரிய உதவி செய்யப்படும். இத்திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள் கபிலர்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகியோ அல்லது கைப்பேசியில் உழவன் செயலியில் தங்கள் பெயரை முன்பதிவு செய்தோ, அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலரின் பரிந்துரையின்படி தேவை யான மரக்கன்றுகளை கபிலர்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இலவசமாக வரும் வாரத்தில் முன்னுரிமை அடிப்படையில் பெற்றுக்கொள்ளலாம். சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதி திராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னு ரிமை அளிக்கப்படும். இந்த தகவல்களை கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தெரிவித்துள்ளார்.

    ×