என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sugarcane Farm"

    • மின் கம்பி உரசியதில் விபத்து
    • போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தாலுகா செளளூர் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 54). இவருக்கு சொந்தமான நிலத்தில் சுமார் 16 ஏக்கர் அளவில் கரும்பு சாகுபடி செய்திருந்தார்.

    இந்த நிலையில் கரும்பு வெட்டப்பட இருந்த நிலையில் நேற்று கரும்பு தோட்டத்தின் மீது சென்ற மின் கம்பி உரசியதில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு 16 ஏக்கர் அளவிலான கரும்பு தோட்டம் முழுவதும் மள மளவென தீ பரவி எரிந்தது. கரும்பு தோட்டத்தில் பரவிய தீயை அணைக்க அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் குடத்தில் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தீயணைப்புத் துறையினர் தீ அணைக்க முயற்சி செய்தனர். அதற்குள் கரும்புத் தோட்டம் எரிந்தது.

    இது குறித்து தீயணைப்புத்துறையினர் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். கரும்பு தோட்டம் எரிந்து நாசமானதால் கரும்பு விவசாயி குடும்பத்தினர் மிகுந்த வேதனைக்கு உள்ளாகினர்.

    • இந்நிலையில் கடந்த ஒருவார காலமாக, தோட்டத்து பகுதியில் தங்கி கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
    • இது தொடர்பாக தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் தெற்கு வட்டத்துக்கு உட்பட்ட கண்டியன்கோவில் பகுதியில் கரும்பு வெட்டும் பணிக்காக, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை சேர்ந்த 8 பேர் வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஒருவார காலமாக, தோட்டத்து பகுதியில் தங்கி கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள், சம்பளம், மருத்துவ வசதிகள் மற்றும் அவசரத் தேவைக்கு ஊருக்கு செல்ல முடியாத நிலையில் இருப்பதாக, தெற்கு தாசில்தாருக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து, கண்டியன்கோவில் பகுதியில் உள்ள கரும்புதோட்டத்தில் தொழிலாளர்களை மீட்டனர். இது தொடர்பாக கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட பலர் விசாரித்து வருகின்றனர். 8 பேரில் ஒருவர் தரகராகவும், மற்ற 7 பேர் தொழிலாளர்களாகவும் பணி செய்துள்ளனர். இது தொடர்பாக தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    ×