search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sudden increase in tomato prices"

    • 21 கிலோ தக்காளி பெட்டி ரூ.1100க்கு விற்பனையாகிறது.
    • தக்காளி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை போன்ற பகுதிகளில் விவசாயம் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சிறுமுகை சுற்றுவட்டார பகுதிகளில் பவானி ஆறு செல்வதால், அங்குள்ள விளை நிலங்களில் விவசாயிகள் நேந்திரன், கதளி, செவ்வாழை, பூவன் உள்ளிட்ட வாழைகளை பயிரிட்டு வருகின்றனர்.

    காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கத்தரிக்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, புடலங்காய், சுரக்காய், பூசணிக்காய், தக்காளி போன்ற நாட்டு காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகிறது.

    இங்கு பயிரிடப்படும் காய்கறிகள் காரமடையில் உள்ள சந்தை, மேட்டுப்பாளையம் மார்க்கெட், கோவையில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பகுதிகளில் தக்காளி விளைச்சல் அதிகமாக இருந்தது. ஆனால் தக்காளியின் கொள்முதல் விலை மற்றும் மார்க்கெட்டுகளிலும் குறைவான விலைக்கே தக்காளிகள் விற்பனை யாகின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்ததுடன், அவர்களுக்கு பொருளாதார சிக்கல்களும் ஏற்பட்டது.

    இதன் காரணமாக தக்காளி பயிரிட்டிருந்த பலரும் தக்காளியை அழித்து விட்டு, மாற்று பயிரினை நட்டு பராமரிக்க தொடங்கினர். ஒரு சிலர் மட்டுமே தக்காளி பயிரிட்டிருந்தனர்.இந்த நிலையில் தற்போது தக்காளியின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

    இதன் காரணமாக காரமடை சந்தையில் 21 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி கிலோ ரூ.1100க்கு விற்பனையாகிறது. சில்லறை விலையில் தக்காளி கிலோ ரூ.50 முதல் ரூ.60க்கு விற்பனையாகி வருகிறது. தக்காளி விலை உயர்வால் காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மழையால் 10 வண்டிகள் மட்டுமே வருகிறது.
    • ஒரு கிலோ தக்காளி ரூ.40க்கு விற்பனையாகி வருகிறது.

    கோவை

    கோவை மேட்டுப்பா ளையம் சாலை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். மார்க்கெட்டிற்கு கர்நாடாக, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து காய்கறிகள் மொத்தமாக கொள்முதல் செய்யப்படுகிறது.

    தற்போது தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தக்காளி வரத்து குறைந்து காணப்படுகிறது.

    கர்நாடகாவில் இருந்து மட்டுமே தக்காளி கொள்முதல் செய்யப்படுகிறது. பருவமழைக்கு முன்பு தினமும் கர்நாடகாவில் இருந்து 20க்கும் மேற்பட்ட லாரிகளில் தக்காளிகள் கொண்டு வரப்படும். மழையால் 10 வண்டிகள் மட்டுமே வருகிறது.

    அதில் 5 வண்டிகள் கேரளாவிற்கு சென்று விடுகிறது. இதனால் மாவட்டத்தில் ஒரு கிலோ ரூ.10க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது விலை உயர்ந்து காணப்படுகிறது. எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் கிலோ ரூ.30க்கு விற்பனை யாகி வருகிறது. டி.கே.மார்க்கெட்டுக்கு பூலுவ ப்பட்டி, கிணத்து க்கடவு, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட மாநகர் பகுதிகளில் இருந்து தக்காளிகள் விற்பனைக்கு வரும். தற்போது மழை காரணமாக வரத்து குறைந்து விட்டது. பூலுவப்பட்டி, கிணத்துக்கடவு பகுதிகளில் இருந்து மட்டுமே தக்காளி வருகிறது. வரத்து குறைவால் தக்காளியின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.40க்கு விற்பனையாகி வருகிறது. இது வரும் நாட்களில் இன்னும் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

    ×