என் மலர்

  நீங்கள் தேடியது "suchindram"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலையன் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி வழிபட்டால் உடல் நோய்கள், கிரக தோஷங்கள் அகலும்.
  குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் பிரசித்தி பெற்ற தாணுமாலையசுவாமி கோயில் உள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளும் அருள்பாலிக்கும் இவ் ஆலயத்தின் வடக்கு பிரகாரத்தில் உள்ள 18 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

  இங்குள்ள ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி வழிபட்டால் உடல் நோய்கள், கிரக தோஷங்கள் அகலும். செவ்வாய், சனி, மூல நட்சத்திர நாள், அமாவாசை நாட்களில் வெண்ணெய் சாத்தி வழிபடுவது உகந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஆஞ்சநேயர் ஜெயந்தி இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதே போல் இந்த ஆண்டுக்கான ஆஞ்சநேயர் ஜெயந்தி வரும் ஜனவரி மாதம் 5-ம்தேதி கொண்டாடப்படுகிறது.

  இதையொட்டி அன்றைய தினம் ஆஞ்சநேயருக்கு களபம், பால், தயிர், நெய், குங்குமம், பன்னீர், சந்தனம், தேன், இளநீர் உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடக்கும் .அன்றைய தினம் மாலை 6 மணிக்கு ஆஞ்சநேயருக்கு எதிரே உள்ள ராமபிரானுக்கு புஷ்பாபிசேகம் நடக்கும். பின்னர் 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு மலர்களால் புஷ்பாபிஷேகம் நடக்கும். இரவு 10 மணிக்கு அலங்கார தீபாராதனை நடக்கும். ஆஞ்சநேயரை வழிபட்டால் வாழ்வில் எல்லா வித துன்பங்களும் விலகும் என்பதால், மும்மூர்த்திகளை வணங்கி விட்டு, பக்தர்கள் ஆஞ்சநேயர் தரிசனம் செய்வதை வழக்கமாக உள்ளனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழாவின் கருட தரிசனம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
  சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

  5-ம் திருவிழாவான நேற்று அதிகாலை கருட தரிசன நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவிலில் இருந்து ரிஷப வாகனத்தில் உமா மகேஸ்வரரும், அன்ன வாகனத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மனும், கருட வாகனத்தில் பெருமாளும் மற்றும் உற்சவ மூர்த்திகளும் வெளியே வந்தனர். அவர்களுடன் வேளிமலை முருகனும், மருங்கூர் சுப்பிரமணியசாமியும், விநாயகரும் இணைந்து கொண்டனர். பின்னர் அனைவரும் கோவிலை வலம் வந்த பின்பு நடுத்தெருவில் உள்ள வீரமார்த்தாண்டன் கோவில் முன் மேற்கு நோக்கி உமா மகேஸ்வரர், பெருமாள், அறம் வளர்த்த நாயகி அம்மன் ஆகிய மூன்று பேரும் நின்றனர்.

  அப்போது அத்திரி முனிவரும், அனுசுயா தேவியாரும் கருட வடிவில் வந்து தாணுமாலய சாமியை வணங்கியதாக ஐதீகம். இந்த நிகழ்ச்சியை காண நேற்று அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுசீந்திரத்தில் கூடினர். அவர்கள் கருட தரிசன நேரத்தில் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

  வருகிற 22-ந் தேதி காலை 9.30 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது. இதில் சுவாமி தேர், அம்மன் தேர், விநாயகர் தேர் ஆகிய மூன்று தேர்கள் உலா வருகின்றன. அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வருவர். அன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண நிகழ்ச்சியும், மறுநாள் அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது.

  விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் கோவில் பணியாளர்களும், சுசீந்திரம் தெய்வீக இயல் இசை நாடக சங்கத்தினரும் செய்துள்ளனர். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆடி மாதத்தையொட்டி சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் கற்கடக ஸ்ரீபலி விழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 16-ந் தேதி வரை நடக்கிறது..
  பிரசித்திபெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தையொட்டி சிறப்பு பூஜையாக கற்கடக ஸ்ரீபலி விழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான கற்கடக ஸ்ரீபலி விழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 16-ந் தேதி வரை நடக்கிறது..

  இன்று முதல் ஆடி மாதம் முழுவதும் காலையில் தாணுமாலயசாமிக்கு சிறப்பு அபிஷேகம், ருத்ர ஜெபத்துடன் மகாதாரை அஷ்டாபிஷேகம், நண்பகல் 11 மணிக்கு தீபாராதனை போன்றவை நடைபெறுகிறது.

  இதைப்போன்று இன்று முதல் 29-ந் தேதி வரை ஆடிமாத களபாபிஷேகம் நடைபெறுகிறது. களப அபிஷேகத்தையொட்டி விஷ்ணுவுக்கும், தாணுமாலயசாமிக்கும் தினந்தோறும் நடைபெறும் நித்யகாரிய பூஜைகளுக்கு பின்பு தங்கக் குடத்தில் சந்தனம், களபம் மற்றும் நறுமணப்பொருட்கள் அடங்கிய களப அபிஷேகம் நடைபெறுகிறது.

  29-ந் தேதி உதய அஸ்தமன பூஜை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் திருக்கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர். 
  ×