என் மலர்

  நீங்கள் தேடியது "Structural works"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருப்பூர், பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணியை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.
  • திருப்பூர் மாவட்டத்தில் 5 பள்ளிகளுக்கு தலா 25 லட்சம் வீதம் ரூ. 1.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  திருப்பூர்:

  திருப்பூரில் 2021 - 22ம் கல்வியாண்டில் சிறப்பாக பணியாற்றியமைக்காக 5 அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வாகியுள்ளனர்.இதற்கான பாராட்டு விழா தமிழக அரசின் கல்வித்துறை ஆணையரகம் சார்பில் சென்னையில் நடந்தது. இதில் திருப்பூர், பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணியை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.

  தொடர்ந்து, கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார், உத்தம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மனோன்மணி, கணக்கம்பாளையம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மெரின் மற்றும் எலையமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயபாலன் ஆகியோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

  பள்ளியின் உட்கட்டமைப்பு வசதி மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, 2023 - 24-ம் நிதியாண்டிற்கு, தலா 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் 5 பள்ளிகளுக்கு தலா 25 லட்சம் வீதம் ரூ. 1.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  ×