என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "SS Ramasami Padayatchiyar"
- நாளை எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியின் 106-வது பிறந்தநாள்.
- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாளை மரியாதை செலுத்தப்படுகிறது.
சென்னை :
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
பெருந்தலைவர் காமராஜரின் முதல் அமைச்சரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகித்த எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியின் 106-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாளை (சனிக்கிழமை) காலை 9.30 மணிக்கு கிண்டி, ஹால்டா சந்திப்பு அருகில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. உ.பலராமன் தலைமையில் பொன். கிருஷ்ணமூர்த்தி, கே. சிரஞ்சீவி, எம்.பி.ரஞ்சன்குமார், இராம.சுகந்தன், அருள் அன்பரசு, முத்தழகன், வழக்கறிஞர் தாமோதரன், தளபதி எஸ்.பாஸ்கர், விருகை பட்டாபி, எஸ்.எம். குமார், ஆர். சுந்தரமூர்த்தி, ஆர்.ஜி.பகத்சிங், பிரபுதாஸ், அக்ராவரம் கே.பாஸ்கர், ஒ.வி.ஆர். ரஞ்ஜித் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.