என் மலர்
நீங்கள் தேடியது "srimathi murder case"
- ஸ்ரீமதியின் தாய் செல்வி, தந்தை ராமலிங்கம், சகோதரர் சந்தோஷ் உள்ளிட்டோர் முதல்வரை சந்தித்து பேசினர்.
- மகளின் மரணத்துக்கு நீதி கோரி முதல்வரை சந்தித்து மனு தாக்கல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை , ஸ்ரீமதியின் தாய் செல்வி சந்திக்க உள்ளதாக கூறப்பட்டது.
அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலினை ஸ்ரீமதியின் பெற்றோர் தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்து பேசினர்.
ஸ்ரீமதியின் தாய் செல்வி, தந்தை ராமலிங்கம், சகோதரர் சந்தோஷ் உள்ளிட்டோர் முதல்வரை சந்தித்து மனு தாக்கல் செய்தனர்.
ஸ்ரீமதியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றம்சாட்டி வந்த நிலையில் மகளின் மரணத்துக்கு நீதி கோரி முதல்வரை சந்தித்துள்ளனர்.
- முதல் மற்றும் 2வது பிரேத பரிசோதனைகளை ஒப்பிட்டு ஸ்ரீமதி தரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
- மேலிருந்து கீழே விழுவதால் எந்த வகையிலும் விலா எலும்பு முறிய சாத்தியமில்லை.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக எடுக்கப்பட்ட முதல் மற்றும் 2வது பிரேத பரிசோதனைகளை ஒப்பிட்டு ஸ்ரீமதி தரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், மண்டை ஓட்டின் பின்புறத்தை தவிர வேறு வெளிப்புற காயங்கள் தலையில் இல்லை என்றும் இறந்த மாணவியின் வலது மார்பகத்தில் மூன்று காயங்கள் உள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைத்தவிர, வலது பக்கம் விலா எலும்பு அனைத்தும் முறிந்து உள்ளது. ஆனால், மேலிருந்து கீழே விழுவதால் எந்த வகையிலும் விலா எலும்பு முறிய சாத்தியமில்லை.
காயத்தின் வடிவங்களை பார்க்கும்போது தற்கொலையாகவோ அல்லது உயரத்திலிருந்து விழுவதால் ஏற்பட்ட இறப்பு, இரண்டு பிரேத பரிசோதனைகளும் ஒத்துப் போகவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.






