என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஸ்ரீமதியின் பெற்றோர் சந்திப்பு
- ஸ்ரீமதியின் தாய் செல்வி, தந்தை ராமலிங்கம், சகோதரர் சந்தோஷ் உள்ளிட்டோர் முதல்வரை சந்தித்து பேசினர்.
- மகளின் மரணத்துக்கு நீதி கோரி முதல்வரை சந்தித்து மனு தாக்கல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை , ஸ்ரீமதியின் தாய் செல்வி சந்திக்க உள்ளதாக கூறப்பட்டது.
அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலினை ஸ்ரீமதியின் பெற்றோர் தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்து பேசினர்.
ஸ்ரீமதியின் தாய் செல்வி, தந்தை ராமலிங்கம், சகோதரர் சந்தோஷ் உள்ளிட்டோர் முதல்வரை சந்தித்து மனு தாக்கல் செய்தனர்.
ஸ்ரீமதியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றம்சாட்டி வந்த நிலையில் மகளின் மரணத்துக்கு நீதி கோரி முதல்வரை சந்தித்துள்ளனர்.
Next Story






