என் மலர்
நீங்கள் தேடியது "Special Doodle"
- ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
- கூகுள் தனது டுடூல் அமைப்பை அந்த நாளின் சிறப்புக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து வருகிறது.
புதுடெல்லி:
10-வது ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்தத் தொடரை இந்தியா, இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. தலா 5 அணிகள் என 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக் போட்டி நடத்தப்படுகிறது. ஏ பிரிவில் இந்தியா, நமீபியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகியவை இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். இதில் இருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். லீக், சூப்பர் 8, அரையிறுதி, பைனல் என மொத்தம் 55 போட்டிகள் நடக்கிறது.
இந்தியாவில் கொல்கத்தா, அகமதாபாத், சென்னை, டெல்லி, மும்பை, இலங்கையில் கொழும்பு, பல்லேகலே ஆகிய மைதானங்களிலும் போட்டிகள் நடக்கின்றன.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை சிறப்பிக்கும் வகையில் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இணைய தேடு பொறியில் முதன்மை நிறுவனமான கூகுள் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்கள், பிரபலங்களின் பிறந்த நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் அதன் தேடு பொறியில் புதிய டூடுலை மாற்றியமைக்கும். தனது டுடூல் அமைப்பை அந்த நாளின் சிறப்புக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
- உலகக்கோப்பைக்கான 2023 போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
- இறுதிப் போட்டியை காண ரசிகர்கள் உச்சக்கட்ட பரபரப்பில் உள்ளனர்.
உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை காண உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியை காண ரசிகர்கள் அகமதாபாத்திற்கு விரைந்துள்ளனர். இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதற்காக வழிபாடு ஸ்தலங்களில் பிரார்த்தனைகளும் நடைபெறுகின்றன.
இந்நிலையில், உலகக்கோப்பை இறுதிப்போட்டியை சிறப்பிக்கும் வகையில் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.







