search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Southern Cultural Center"

    • தினமும் மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை கோடை விழா நடைபெற உள்ளது.
    • நாளை சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலக இசை தின நிகழ்ச்சிநடைபெற உள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் இயக்குனர் கோபாலகிருஷ்ணன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது:-

    தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையம் இந்திய அரசு, கலாச்சாரதுறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மையமாகும். இந்தியாவின் கிராமப்புற பாரம்பரிய கலைகளையும் மற்றும் பாரம்பரிய பழங்குடி கலைகளையும் பாதுகாத்து வருகின்றன.

    இந்த நிலையில் தென்னகப் பண்பாட்டு மைய திறந்தவெளி கலையரங்கில் கோடை விழா-2023 முன்னிட்டு பல்வேறு மாநில கலைஞர்களின் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள்,

    கைவினை கலைஞர்களின் பொருட்காட்சி விற்பனை மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா நாளை (புதன்கிழமை ) மாலை தொடங்குகிறது. இந்த விழா வருகிற 25 ஆம் தேதி வரை நடைபெறும். தினமும் மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை கோடை விழா நடைபெற உள்ளது.

    இந்த விழாவை எஸ்.எஸ். பழனி மாணிக்கம் எம்.பி. தொடங்கி வைக்கிறார்.

    மேலும் இந்த கலை விழா தென்னகப் பண்பாட்டு மையம் மட்டுமல்லாமல் பாபநாசம், மயிலாடுதுறை மற்றும் திருச்சியிலும் நடைபெறும்.

    இவ்விழாவில் தமிழ்நாடு, ஆந்திரா ,கர்நாடகா, கேரளா, கோவா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர்.

    இந்தக் கலை விழாவுக்கு முன்னோட்டமாக தென்னக பண்பாட்டு மைய வளாகத்தில் பிரதி வெள்ளிக்கிழமைகள் தோறும் மாலை 6.30 மணிக்கு வாராந்திர கலை விழா தஞ்சை மற்றும் தஞ்சைக்கு அருகில் உள்ள கலைஞர்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படு த்தவும், கிராமப்புற மக்களின் கலை ஆர்வத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டு கலை நிகழ்ச்சிகள் வாரம் தோறும் நடைபெற்று வருகிறது.

    மேலும் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தவும் தீர்மானிக்கப்ப ட்டுள்ளது.

    நாளை சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தென்னகப் பண்பாட்டு மைய வளாகத்தில் காலை 7 மணிக்கு உலக யோகா தினம் மற்றும் உலக இசை தின நிகழ்ச்சிநடைபெற உள்ளன.

    அனைவரும் கோடை விழாவுக்கு வருகை தந்து நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது நிர்வாக அலுவலர் சீனிவாசன் ஐயர், அலுவலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×