என் மலர்

  நீங்கள் தேடியது "small onion price low"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தருமபுரி மாவட்டத்தில் சின்ன வெங்காயத்தின் விலை சரிவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
  தருமபுரி:

  தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததால் வெங்காயம் வரத்து குறைவாக இருந்தது. காய்கறிகளின் விலைகள் உயர்ந்து வந்த நிலையில் சின்ன வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக சற்று உயர்ந்து வந்தது. ரூ.40 முதல் 50 வரை விற்பனையானது. இந்த நிலையில், தற்போது தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம்,  மாரண்டஅள்ளி,  அதகப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சின்ன வெங்காயம் மிதமான விளைச்சல் அடைந்தும், வெளியில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டது. மேலும் தற்பொழுது  மகாராஷ்டிராவில் இருந்து வெங்காயம் வரத்தும் அதிகரித்து காணப்பட்டது.

  இதனால் உள்ளூர் சந்தைக்கு சின்ன வெங்காயம் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக  கிலோ ரூ.40 முதல் 50 வரை விற்பனையான சின்ன வெங்காயத்தின் விலை தற்போது குறைந்து கிலோ ரூ.30-க்கு விற்பனையாகிறது. மேலும் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள் ரூ.20-க்கும் குறைவாகவே வாங்கி செல்கின்றனர். இதனால் சின்ன வெங்காயம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

  இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும்போது கிலோ ரூ.150 கொடுத்து வாங்கி பயிரிட்டு, ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை செலவு செய்துள்ளோம். ஆனால் இதன்மூலம் கிடைக்கும் இலாபத்தை வைத்து அறுவடை செய்யும் ஆட்களுக்கு கூலி கொடுக்கக்கூட முடியவில்லை என வேதனையுடன் கூறுகின்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடையநல்லூர் பகுதியில் சின்ன வெங்காய விலை ரூ. 20-க்கு விலை போவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
  கடையநல்லூர்:

  கடையநல்லூர் பகுதியில் கிருஷ்ணாபுரம், குமந்தாபுரம், சொக்கம்பட்டி, காசிதர்மம், இடைகால் மங்களாபுரம், கம்பனேரி, அச்சம்பட்டி, கரடிகுளம், நயினாரகரம், வள்ளியம்மையாபுரம், கிளாங்காடு, ஆய்க்குடி, நெடு வயல் உள்ளிட்ட பகுதிகளில் வெய்காயம் அதிகளவில் பயிரிடப்படுகிறது.

  கடந்த ஆண்டு போதிய மழை, விவசாயத்திற்கு ஆட்கள் பற்றாக்குறை காரணமாக சரிவர விவசாயம் நடைபெறவில்லை. இதையடுத்து ஒரு சிலர் மட்டுமே தொடர்ந்து விவசாயம் செய்தனர். இந்நிலையில் விளைச்சல் குறைவால் சின்ன வெங்காய விலை அதிகபட்ச உச்சத்திலிருந்து பயிரிட்ட பலர் நல்ல லாபம் ஈட்டினர். 

  கடையநல்லூர் மார்க்கெட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ. 110  வரை விலைபோனது. இதனால் மகிழ்ச்சியில் இருந்த விவசாயிகள் வெங்காய பயிரை கூடுதலாக பயிரிட துவங்கினர். இந்நிலையில் ஆந்திராவிலிருந்து விவசாயிகள் வெங்காயத்தை இறக்குமதி செய்ததையடுத்து விலை கட்டுபாட்டுக்கு வந்தது. தற்போது உள்ளூர் வெங்காய வரத்து அதிகரித்ததையடுத்து விலை கடுமையாக குறைந்தது. மார்க்கெட்டில் கிலோ ரூ. 20 கேட்க ஆளில்லாமல் போனதால் விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்துள்ளனர். ஒரு பக்கம் உற்பத்தி செய்த வெங்காயத்திற்கு உரிய விலை கிடைக்க வில்லையே என்ற வேதனையில் விவசாயிகள் ஒரு புறமிருக்க மிக, மிக குறைந்த விலையில் சின்னவெங்காயம் கிடைக்கிறதே என்ற மகிழ்ச்சியில் குடும்ப பெண்களும் உள்ளனர். 

  இது குறித்து குமந்தாபுரம் விவசாயி அருண்குமார் கூறுகையில் வெங்காயம் பயிரிட்ட பலருக்கு நல்ல விலை கிடைத்ததையடுத்து நானும் வெங்காயம் பயிரிட்டேன். விளைச்சலாகி அறுவடைசெய்து மார்க்கெட்டிற்கு கொண்டு சென்றால் கிலோ ரூ. 20 ரூபாய்க்கு கூட விலை இல்லை. செலவு செய்த கூலி கூட மிஞ்ச வில்லை என்றார்.
  ×