என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய கிழக்கு விமானப் போக்குவரத்து"

    • ஜோர்டானுக்கு வரும், அங்கிருந்து செல்லும் அதன் வழியாகச் செல்லும் அனைத்து சர்வதேச விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன
    • தினசரி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை வான்வெளி மூடப்படும்

    மத்தியக் கிழக்கில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக ஜோர்டான் தனது வான்வெளியை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது. ஜோர்டானின் சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் இன்றுமுதல் தினசரி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை (15 மணிநேரம்) வான்வெளி மூடப்படும் என்று அறிவித்துள்ளது.

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், ஈரான் மீது நடத்திய தாக்குதல்கள் மற்றும் அதற்கு ஈரானின் பதில் தாக்குதல்கள் காரணமாக, விமானப் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜோர்டானுக்கு வரும், அங்கிருந்து செல்லும் மற்றும் ஜோர்டான் வழியாகச் செல்லும் அனைத்து சர்வதேச விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. சில விமானங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

    மறு அறிவிப்பு வரும் வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என்பதால், பயணிகள் தங்களது விமான நிறுவனங்களை நேரடியாகத் தொடர்புகொண்டு பயண விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் ஏர் இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட இந்திய விமான நிறுவனங்களும், லுஃப்தான்சா மற்றும் எமிரேட்ஸ் போன்ற சர்வதேச நிறுவனங்களும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சேவைகளை ரத்து செய்துள்ளன.

    ×