என் மலர்
நீங்கள் தேடியது "விசா நடைமுறை"
- விசா பெற்று வருபவர்கள் அமெரிக்க அரசின் பொது நலத்திட்டங்களை அதிகம் சார்ந்து இருக்கக்கூடும்
- சுற்றுலா விசா, வணிக விசா மற்றும் மாணவர் விசாக்களுக்கு தற்போது இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசு ஜனவரி 21 முதல் 75 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு குடிவரவு விசா வழங்கும் நடைமுறையை நிறுத்தி வைக்கிறது என அந்நாட்டு வெளியுறத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. விசா பரிசோதனை மற்றும் சரிபார்ப்பு நடைமுறைகள் மறுமதிப்பீடு செய்யப்படும் வரை, விசா விண்ணப்பங்களை நிராகரிக்குமாறு தூதரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு என குறிப்பிட்ட காலக்கெடு ஏதும் குறிப்பிடப்படவில்லை.
இந்த முடிவின் மூலம், உலகில் உள்ள கிட்டத்தட்ட 200 நாடுகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. விசா பெற்று வருபவர்கள் அமெரிக்க அரசின் பொது நலத்திட்டங்களை அதிகம் சார்ந்து இருக்கக்கூடும் என்ற கவலையினால், இந்த 75 நாடுகளுக்கான குடியேற்ற விசா நடைமுறைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்தத் தடை பெரும்பாலும் குடியேற்ற விசாக்களுக்கு மட்டுமே பொருந்தும். சுற்றுலா விசா, வணிக விசா மற்றும் மாணவர் விசாக்களுக்கு தற்போது இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஜனவரி 21 முதல் அமலுக்கு வருகிறது. இந்தப் பட்டியலில் ரஷ்யா, பாகிஸ்தானும் அடங்கும்.
பாதிக்கப்பட்ட 75 நாடுகளின் முழுப் பட்டியல் பின்வருமாறு:
ஆப்கானிஸ்தான், அல்பேனியா, அல்ஜீரியா, ஆன்டிகுவா மற்றும் பார்புடா, ஆர்மீனியா, அஜர்பைஜான், பஹாமாஸ், பங்களாதேஷ், பார்படாஸ், பெலாரஸ், பெலிஸ், பூட்டான், போஸ்னியா, பிரேசில், பர்மா (மியான்மர்), கம்போடியா, கேமரூன், கேப் வெர்டே, கொலம்பியா, கோட் டி ஐவரி (Cote d'Ivoire), கியூபா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, டொமினிகா, எகிப்து, எரித்திரியா, எத்தியோப்பியா, பிஜி, காம்பியா, ஜார்ஜியா, கானா, கிரெனடா, குவாத்தமாலா, கினியா, ஹைட்டி, ஈரான், ஈராக், ஜமைக்கா, ஜோர்டான், கஜகஸ்தான், கொசோவோ, குவைத், கிர்கிஸ்தான், லாவோஸ், லெபனான், லைபீரியா, லிபியா, மாசிடோனியா, மால்டோவா, மங்கோலியா, மாண்டினீக்ரோ, மொராக்கோ, நேபாளம், நிகரகுவா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ குடியரசு, ரஷ்யா, ருவாண்டா, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், செயின்ட் லூசியா, செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், செனகல், சியரா லியோன், சோமாலியா, தெற்கு சூடான், சூடான், சிரியா, தான்சானியா, தாய்லாந்து, டோகோ, துனிசியா, உகாண்டா, உருகுவே, உஸ்பெகிஸ்தான் மற்றும் ஏமன்.






