என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அசிம் முனீர்"

    • டிசம்பர் 26 அன்று ராவல்பிண்டியில் திருமணம் நடைபெற்றது
    • தனிப்பட்ட நிகழ்வு என்பதால் பொதுவெளியில் கூறவில்லை

    பாகிஸ்தான் நாட்டின் முப்படை தளபதி அசிம் முனீரின் 3-வது மகளுக்கு திடீரென ரகசிய திருமணம் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தகவலின்படி கடந்த 26-ந்தேதி அன்று ராவல்பிண்டியில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் அவரது மகளின் திருமணம் நடைபெற்றது. மகள் மஹ்னுாரை, தன் சகோதரர் காசிம் முனீரின் மகனான அப்துல் ரஹ்மானுக்கு திருமணம் செய்து வைத்தார். நெருங்கிய உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றனர். 

    அதேநேரத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் விழாவில் பங்கேற்றார். இவரை விமான நிலையத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அசிம் முனீர் வரவேற்றனர். அசிம் முனீரின் மருமகன் அப்துல் ரஹ்மான் முன்பு ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றிவர் என்றும், தற்போது குடிமை பணிகளில், ராணுவ அதிகாரிகளுக்கான ஒதுக்கீட்டின் கீழ் உதவி ஆணையராக பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

    மூத்த அரசியல் தலைவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த திருமணம், பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்களின் பார்வையில் இருந்து விலக்கி வைக்கப்பட்டு, ரகசியமாக நடத்தப்பட்டது. திருமணத்தின் அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

    பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், துணைப் பிரதமர் இஷாக் தார், பஞ்சாப் முதலமைச்சர் மரியம் நவாஸ், ஐ.எஸ்.ஐ. தலைவர் மற்றும் முன்னாள் ராணுவத் தலைவர்கள், மூத்த ராணுவ அதிகாரிகள் உள்பட சுமார் 400 விருந்தினர்கள் திருமணத்தில் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ×