என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோமன் அலி"

    • பாகிஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நோமன் அலி 6 விக்கெட்டுகளை சாய்த்தார்
    • பாகிஸ்தான் அணி 109 ரன்கள் முன்னிலையில் தனது 2-வது இன்னிங்சை விளையாட உள்ளது.

    லாகூர்:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லாகூரில் நடைபெற்று வருகிறது .

    . இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் தொடக்க நாளில் 5 விக்கெட்டுக்கு 313 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 378 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 75 ரன்னிலும், சல்மான் ஆஹா 93 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அந்த அணி கடைசி 16 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது. இடக்கை சுழற்பந்து வீச்சாளர் செனுரன் முத்துசாமி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார் . அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும்.

    பின்னர் தென்ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தது. கேப்டன் எய்டன் மார்க்ரம் (20 ரன்), வியான் முல்டர் (17 ரன்) சீக்கிரம் வீழ்ந்தாலும் ரையான் ரிக்கெல்டனும், டோனி டி ஜோர்ஜியும் அரைசதம் அடித்து சரிவில் இருந்து மீட்டனர். ஒரு கட்டத்தில் 2 விக்கெட்டுக்கு 174 ரன்களுடன் வலுவாக இருந்த தென்ஆப்பிரிக்கா கடைசி ஒரு மணி நேரத்தில் சறுக்கியது.

    ரிக்கெல்டன் 71 ரன்னிலும், டிரிஸ்டான் ஸ்டப்ஸ் 8 ரன்னிலும், டிவால்ட் பிரேவிஸ் ரன் ஏதுமின்றியும், கைல் வெரைன் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் தென்ஆப்பிரிக்கா 67 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்திருந்தது. டோனி ஜி ஜோர்ஜி (81 ரன்), முத்துசாமி (6 ரன்) களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில் 3-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. முத்துசாமி 11 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஜோர்ஜி சதம் அடித்து அசத்தினார். அவர் 104 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 269 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    பாகிஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் நோமன் அலி 6 விக்கெட்டுகளை சாய்த்தார். பாகிஸ்தான் அணி 109 ரன்கள் முன்னிலையில் தனது 2-வது இன்னிங்சை விளையாட உள்ளது.

    • பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 163 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
    • பாகிஸ்தான் தரப்பில் நோமன் அலி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    முல்தான்:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி முல்தானில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கிராக் பிராத்வேட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    தொடக்கம் முதல் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் மோட்டி மட்டுமே நிலைத்து ஆடி அரைசதமடித்தார். அவர் 55 ரன்களில் வெளியேறினார் . வாரிகன் 36 ரன்களும் ரோச் 25 ரன்களும் எடுத்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 163 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

    பாகிஸ்தான் அணி தரப்பில் நோமன் அலி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதில் ஹாட்ரிக் விக்கெட்டும் அடங்கும். இதன் மூலம் 73 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக ஹாட்ரிக் விக்கெட் வீத்திய முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை நோமன் அலி படைத்துள்ளார்.

    1952-ம் ஆண்டில் இருந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வரும் பாகிஸ்தான் அணியில் எந்தவொரு வீரரும் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×