என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவியை தாக்கிய சிறுமிகள்"

    • காட்சிகள் நெஞ்சை பதைபதைக்கும் வகையில் இருந்தது.
    • பள்ளி மாணவியை கண்மூடித்தனமாக தாக்கியதும் தெரியவந்தது.

    மும்பை:

    பள்ளி மாணவி சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சிறுமிகள், அவர்களது பெற்றோருக்கு போலீசார் சார்பில் கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ளது.

    மும்பையில் பள்ளி செல்லும் ஒரு மாணவியை சில சிறுமிகள் சேர்ந்து கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ காட்சிகள் கடந்த சில நாட்களாக சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    சிறுமிகள் கும்பலாக சேர்ந்து இரக்கமின்றி பள்ளி மாணவியை முடியை பிடித்து இழுத்து அடித்து, கீழே தள்ளி உதைக்கும் காட்சிகள் நெஞ்சை பதைபதைக்கும் வகையில் இருந்தது.

    சிறுமிகள், பள்ளி மாணவியை தாக்கிய சம்பவம் 2 வாரத்துக்கு முன் வெர்சோவா யாரி ரோடு பகுதியில் நடந்தது என்பது தெரியவந்தது.

    சமூகவலைதளத்தில் பரவிய வீடியோ தொடர்பாக வெர்சோவா போலீசார் தாமாக முன்வந்து விசாரணை நடத்தினர்.


    விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்ட சிறுமிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவி யாரி ரோடு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், சிறிய பிரச்சனை தொடர்பாக தங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அவர்கள் பள்ளி மாணவியை கண்மூடித்தனமாக தாக்கியதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் சம்பவத்தில் தொடர்புடைய பள்ளி மாணவி, சிறுமிகள் மற்றும் அவர்களின் பெற்றோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், போலீஸ் அதிகாரிகள் மூலம் கவுன்சிலிங் வழங்கினர்.

    பள்ளி மாணவியை சிறுமிகள் சேர்ந்து தாக்கிய சம்பவத்தை அடுத்து வெர்சோவா பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

    ×