என் மலர்
நீங்கள் தேடியது "நாம் தமிழர்க கட்சி"
- தமிழர்கள் இழந்த உரிமையை மீட்கவும், இருக்கும் உரிமையைப் பாதுகாக்கவும் கிடைத்த நல்வாய்ப்பு.
- இறையன்புக்கு பிறகு தமிழர் ஒருவரை தலைமைச் செயலாளராக நியமித்துள்ள தமிழ்நாடு அரசிற்கு உள்ளப்பூர்வமான பாராட்டுகள்.
தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமிக்கப்பட்டிருப்பதற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து சீமான் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் புதிய தலைமைச்செயலாளராக அனுபவமும், திறமையும் வாய்ந்த மதிப்பிற்குரிய ஐயா முருகானந்தம் இ.ஆ.ப. அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
ஐயா முருகானந்தம் அவர்களின் உண்மையும், நேர்மையுமான, அர்ப்பணிப்பு மிகுந்த பணித்திறனுக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே இந்நியமனத்தைக் கருதுகிறேன்.
தமிழர்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரச் சிக்கல்களை உணர்வுப்பூர்வமாக அணுகி உரிய தீர்வினைக் காண, தமிழ்நாட்டின் அதியுயர் ஆட்சிமை பதவிகளில் மண்ணின் மொழியும், மக்களின் வலியும் புரிந்த மாட்சிமை பொருந்திய தமிழர்களே நியமிக்கப்பட வேண்டும் என்ற நாம் தமிழர் கட்சியின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்கும் விதமான தற்போதைய நியமனம் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
தலைமைச்செயலாளராக ஐயா முருகானந்தம் அவர்களின் நியமனம் தமிழர்கள் இழந்த உரிமையை மீட்கவும், இருக்கும் உரிமையைப் பாதுகாக்கவும் கிடைத்த நல்வாய்ப்பாகும்.
தத்துவ அறிஞர் ஐயா இறையன்பு அவர்களுக்குப் பிறகு, தமிழர் ஒருவரைத் தலைமைச்செயலாளராக நியமித்துள்ள தமிழ்நாட்டு அரசிற்கு என்னுடைய உளப்பூர்வமான பாராட்டுகள்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.