என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேத்ராவதி எக்ஸ்பிரஸ்"

    • ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
    • ரெயில் அதிர்ஷ்டவசமாக தப்பியிருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மும்பைக்கு நேத்ராவதி எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. மொத்தம் 1,786 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் இந்த ரெயில் 43 ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது. பயண நேரம் 32 மணி நேரம் ஆகும்.

    இந்நிலையில் இந்த ரெயில் திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று காலை 9.15 மணிக்கு வழக்கம்போல் புறப்பட்டது. காசர்கோடு ரெயில் நிலையத்திற்கு அருகில் உள்ள பீரிச்சேரி ரெயில்வே கேட் பகுதயில் இரவு 8 மணியளவில் சென்றது. அப்போது என்ஜினில் ஏதோ சிக்கியது போல் பயங்கர சத்தம் கேட்டது.

    இதுகுறித்து என்ஜின் பைலட், ரெயில்வே அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் அந்த இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது ரெயில்வே தண்டவாளத்தின் குறுக்கே கற்கள் கிடந்தன. அவற்றின் மீது ஏறியதால் தான் ரெயில் என்ஜினில் பயங்கர சத்தம் கேட்டிருக்கிறது.

    ஆனால் தண்டவாளத்தின் குறுக்கே கற்கள் போட்டது யார்? என்பது தெரியவில்லை. ரெயிலை கவிழ்க்க மர்மநபர்கள் செய்ய சதியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இகுறித்து தகவலறிந்த ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தண்டவாளத்தின் குறுக்கே போடப்பட்ட கற்களின் மீது நேத்ராவதி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியபோதும், அந்த ரெயில் அதிர்ஷ்டவசமாக தப்பியிருக்கிறது. இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    ×