என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை காவல் துறை"

    • புதிதாக அருண் காவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ளார்.
    • துணை ஆணையர்கள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டுள்ளனர்.

    சென்னையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை பூதாகாரமாக வெடித்துள்ளது. இதையடுத்து தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு சென்னை மாநகர காவல் ஆணையரை மாற்றி, புதிதாக அருண் காவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ளார்.

    புதிதாக பொறுப்பேற்றுள்ள சென்னை காவல் ஆணையர் அருண், அனைத்து காவல் துணை ஆணையர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். 12 காவல் மாவட்ட துணை ஆணையர்கள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டுள்ளனர்.

    கண்டுபிடிக்க முடியாத வழக்குகள் தொடர்புடைய கோப்புகள், ரவுடிகளின் பட்டியல், குற்றங்கள் அதிகம் நடக்கும் காவல் மாவட்ட விபரங்களை பெற்று ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன, இனி எதுமாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன என்பது குறித்து காவல் ஆணையர் ஆலோசனை வழங்கியதாக தகவல்.

    இதுதவிர ரவுடிகளின் குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும், முன்னெசரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கியுள்ளதாக தெரிகிறது. 

    ×