என் மலர்
நீங்கள் தேடியது "விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா"
- கடந்த 10 ஆண்டுகளாக எனது பணியை பார்த்து அரசின் மீது மக்கள் அபரிமிதமான நம்பிக்கை வைத்துள்ளனர்.
- என்னை பொறுத்தவரை ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் என நான்கு பெரிய ஜாதிகள்தான் உள்ளன.
புதுடெல்லி:
பிரதமர் மோடி, இன்று அரசின் பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான சங்கல்ப் யாத்திரை (விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா) பயனாளிகளுடன் அவர் பேசினார்.
பிரதமரின் மகளிர் வேளாண் டிரோன் மையத்தை தொடங்கி வைத்தார். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளில் 15 ஆயிரம் டிரோன்கள் வழங்கப்படும்.
மானிய விலையில் மருந்துகளை வழங்கும் மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாக உயர்த்தும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
தியோகரில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் 10 ஆயிரமாவது மக்கள் மருந்தகத்தை மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த 2 திட்டங்களையும் இந்த ஆண்டு சுதந்திர தின உரையின் போது பிரதமர் அறிவித்த வாக்குறுதிகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது. இதுவரை 12 ஆயிரம் பஞ்சாயத்துக்களை எட்டி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக எனது பணியை பார்த்து அரசின் மீது மக்கள் அபரிமிதமான நம்பிக்கை வைத்துள்ளனர்.
மற்றவர்களிடம் இருந்து மக்களின் எதிர்பார்ப்புகள் முடிவடையும் இடத்தில் இருந்து மோடியின் உத்தர வாதம் தொடங்குகிறது என்ற குரல் நாடு முழுவதும் கேட்கிறது. என்னை பொறுத்தவரை ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் என நான்கு பெரிய ஜாதிகள்தான் உள்ளன. அவர்களின் வளர்ச்சியே இந்தியாவை முன்னேற்றம் அடைய செய்யும்.
இவ்வாறு அவர் பேசினார்.






