என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆரோக்கிய உணவு வகைகள்"

    • அதிக உப்பு உட்கொள்வது உங்கள் இதயத்தைப் பாதிக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
    • ரத்தத்தில் உள்ள நீரின் அளவை அதிகரித்து செல்கள் மீதான அழுத்தத்தை அதிகரிக்கிறது.

    இந்திய உணவு வகைகளில் உப்பு மிக முக்கியமான ஒன்றாகும். உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்ற நிலையில் நாம் அதனை அளவுக்கு மீறி சில சமயங்களில் எடுக்கிறோம். அதிகமாக உப்பு சாப்பிடுவது எலும்புகளை பலவீனப்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இது உடலில் கால்சியம் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. உணவில் அதிக உப்பு உட்கொள்வது உங்கள் சிறுநீரகங்களில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

    சிறுநீரகங்கள் சோடியத்தை வடிகட்ட கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உப்பு அதிகமாக சேர்த்தால் குளிர்காலத்தில் நமது சருமம் வறண்டு உடலில் உள்ள நீர் சமநிலையை சீர்குலைக்கிறது. இதனால் முகத்தில் சுருக்கங்கள் விரைவாக தோன்றும்.

    அதிக உப்பு உட்கொள்வது உங்கள் இதயத்தைப் பாதிக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இது ரத்தத்தில் உள்ள நீரின் அளவை அதிகரித்து செல்கள் மீதான அழுத்தத்தை அதிகரிக்கிறது. எனவே குளிர்காலத்தில் பக்கோடா, சமோசா, சாட் போன்ற வறுத்த உணவுகள் அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

    • உண்ணும் உணவில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும்.
    • பெண்கள் தங்கள் அழகையும், ஆரோக்கியத்தையும் பராமரிப்பதில் சிறந்தவர்கள்.

    வயது அதிகரிக்கும் போது நமது உடல் பலவீனமாகத் தொடங்கும் மற்றும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உண்ணும் உணவில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் தங்கள் அழகையும், ஆரோக்கியத்தையும் பராமரிப்பதில் சிறந்தவர்கள். மேலும் பெண்களை விட ஆண்களுக்கே உயிரைப் பறிக்கும் பல நோய்களின் அபாயமும் அதிகம் உள்ளன.

    குறிப்பாக 30 வயது வரை வலிமையாக இருக்கும் நாம், 30 வயதை தாண்டியதுமே உடலில் பிரச்சினைகளை சந்திக்கத் தொடங்கிவிடுவோம். அதோடு அப்பிரச்சினையை சரிசெய்ய முயற்சிக்காவிட்டால், அது 40, 50 வயதுகளில் மீண்டும் தலைத்தூக்கி நிலைமையை மோசமாக்கிவிடும். எனவே ஆண்கள் 30 வயதை தொட்டுவிட்டால், நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ விரும்பினால் உண்ணும் உணவுகளில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். வாழ்நாளை நீட்டிக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் எந்த மாதிரியான உணவுகளை உண்ண வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.

    பீன்ஸ்

    பீன்ஸில் நார்ச்சத்து அதிகமாக உள்ளன. அகாடமி ஆஃப் நியூட்ரிஷன் மற்றும் டயட்டிக்சின் படி, 30 வயதுடைய ஆண்கள் குறைந்தது 40 கிராம் நார்ச்சத்தை தினமும் உட்கொள்ள வேண்டும். நார்ச்சத்தானது மலச்சிக்கலைத் தடுத்து, ரத்த சர்க்கரை அளவு மற்றும் பசியைக் கட்டுப்படுத்த உதவுவதோடு மட்டுமின்றி, குடல் புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்க உதவுகிறது.

    கீரைகள்

    30 வயதை எட்டிவிட்டால், தினசரி உணவில் நற்பதமான கீரையை அவசியம் சேர்க்க வேண்டும். ஏனெனில் கீரைகளில் வைட்டமின் ஏ என்னும் சக்தி வாய்ந்த ஆண்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை உடலினுள் ஏற்படும் அழற்சியை எதிர்த்துப் போராட உதவுகின்றன.

    செர்ரி பழங்கள்

    செர்ரிப் பழங்களிலும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவையும் 30 வயதிற்கு மேல் உடலினுள் ஏற்படும் அழற்சியைக் குறைத்து, ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. ஆஸ்டியோபோரோசிஸ் என்பது வயதான காலத்தில் ஆண், பெண் என இருபாலரையும் தாக்கும் ஒரு எலும்பு தொடர்பான நிலையாகும். தற்போது இந்த பிரச்சனை 30 வயதிலேயே தொடங்கிவிடுவதால், இதைத் தவிர்க்க செர்ரி போன்ற பழங்களை அதிகம் உணவில் சேர்ப்பது நல்லது.

    உருளைக்கிழங்கு

    நிறைய பேர் வயது அதிகரிக்கும் போது உருளைக்கிழங்கு உட்கொள்வதைத் தவிர்ப்பார்கள். ஆனால் உருளைக்கிழங்கில் பொட்டாசியம் அதிகமாக உள்ளன. அதுவும் ஒரு உருளைக்கிழங்கில் ஒரு வாழைப்பழத்தை விட இருமடங்கு அளவில் பொட்டாசியம் உள்ளது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே பிபி பிரச்சனை வரக்கூடாதெனில் உருளைக்கிழங்கை அவ்வப்போது உணவில் சேர்த்து வர வேண்டும்.

    காபி

    30 வயதை எட்டிய ஆண்கள் தினமும் 1.2 கப் காபி குடிப்பது நல்லது. இதனால் பலவகையான புற்றுநோய்கள், இதய நோய், டிமென்ஷியா, கல்லீரல் நோய் மற்றும் சர்க்கரை நோய் போன்றவற்றின் அபாயத்தைக் குறைக்கலாம். மேலும் காபி உடலினுள் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. ஆனால் காபியைக் குடிக்கும் போது சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். மாறாக கருப்பட்டி, வெல்லம் போன்ற இயற்கை சர்க்கரையை சேர்க்க வேண்டும்.

    தயிர்

    ஆய்வுகளின் படி, 25-30 வயதை எட்டிவிட்டால் எலும்புகளின் உறிஞ்சும் திறன் குறைந்துவிடும். எனவே எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள கால்சியம் நிறைந்த உணவுகளை எடுக்க வேண்டியது அவசியம். இப்படிப்பட்ட கால்சியம் மற்றும் வைட்டமின் கே2 தயிரில் அதிகமாக உள்ளன. இவை எலும்புகளில் கால்சியத்தை படிய செய்து, எலும்புகளை ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் தயிரை 3 வயதிற்கு மேல் கட்டாயம் தினசரி உணவில் சேர்க்க வேண்டும்.

    ×