அளவுக்கு மிஞ்சினால்...

அதிக உப்பு உட்கொள்வது உங்கள் இதயத்தைப் பாதிக்கும் எனவும் சொல்லப்படுகிறது.ரத்தத்தில் உள்ள நீரின் அளவை அதிகரித்து செல்கள் மீதான அழுத்தத்தை அதிகரிக்கிறது.
அளவுக்கு மிஞ்சினால்...
Published on

இந்திய உணவு வகைகளில் உப்பு மிக முக்கியமான ஒன்றாகும். உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்ற நிலையில் நாம் அதனை அளவுக்கு மீறி சில சமயங்களில் எடுக்கிறோம். அதிகமாக உப்பு சாப்பிடுவது எலும்புகளை பலவீனப்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இது உடலில் கால்சியம் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. உணவில் அதிக உப்பு உட்கொள்வது உங்கள் சிறுநீரகங்களில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

சிறுநீரகங்கள் சோடியத்தை வடிகட்ட கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உப்பு அதிகமாக சேர்த்தால் குளிர்காலத்தில் நமது சருமம் வறண்டு உடலில் உள்ள நீர் சமநிலையை சீர்குலைக்கிறது. இதனால் முகத்தில் சுருக்கங்கள் விரைவாக தோன்றும்.

அதிக உப்பு உட்கொள்வது உங்கள் இதயத்தைப் பாதிக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இது ரத்தத்தில் உள்ள நீரின் அளவை அதிகரித்து செல்கள் மீதான அழுத்தத்தை அதிகரிக்கிறது. எனவே குளிர்காலத்தில் பக்கோடா, சமோசா, சாட் போன்ற வறுத்த உணவுகள் அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

X

Maalai Malar
www.maalaimalar.com