என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருஷ்ண ஜெயந்தி விரதம்"

    • ஸ்ரீகிருஷ்ணபாதம் கூறிக்கொண்டே மாக்கோலமிட்டு வரவேற்கலாம்.
    • கண்ணனே நேரில் நம் வீட்டுக்கு எழுந்தருள்வதாக ஐதீகம்.

    கிருஷ்ண ஜெயந்தி அன்று தன்னை அழைக்கும் பக்தர்களின் வீட்டிற்கு கண்ணன் வருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    எனவே கிருஷ்ணஜெயந்தி அன்று வீட்டை சுத்தப்படுத்தி அலங்கரித்து குழந்தை கண்ணனை வரவேற்கும் விதத்தில் வீட்டு வாசலில இருந்து பூஜை அறை வரையில் சின்னக்கண்ணன் நடந்து வருவது போல் அவனது பாதச்சுவடுகளை ஸ்ரீகிருஷ்ணபாதம் கூறிக்கொண்டே மாக்கோலமிட்டு வரவேற்கலாம்.

    இதனால் கண்ணனே நேரில் நம் வீட்டுக்கு எழுந்தருள்வதாக ஐதீகம். ஆயர்பாடியில் கண்ணனை வரவேற்க சித்திரக்கோலம் (ரங்கோலி), மலர் அலங்காரம், பூக்கோலமிடுவர். அதை நமது இல்லங்களிலும் செய்து கிருஷ்ணரை வரவேற்க வேண்டும். இதனால் கண்ணனே தன் திருப்பாதங்களை பதித்து நடந்து வந்து பூஜை அறையில் நாம் வைத்துள்ள நைவேத்திய பட்சணங்களை ஏற்றுக் கொள்கிறார் என்பதாகும்.

    • கண்ணன் அவதரித்த ரோகிணி நட்சத்திரத்தை வைணவர்கள் கிருஷ்ண ஜெயந்தி என்பார்கள்.
    • கணவன், மனைவி இருவருமே செய்யத்தக்க விரதம் இது.

    கண்ணன் அவதரித்த ரோகிணி நட்சத்திரத்தை வைணவர்கள் கிருஷ்ண ஜெயந்தி என்பார்கள்.

    கண்ணனின் பிறந்த நாளான அன்று உரிய முறையில் விரதம் இருக்க வேண்டும்.

    அது மட்டுமின்றி பலவகைப் பட்சணங்களை இல்லத்தில் தயார் செய்து வைத்து இரவில் கண்ணனைப் பூஜை செய்து வணங்குவது வழக்கம்.

    அப்பொழுது கண்ணன் புகழ் பாடும் கீதங்கள், சரிதங்கள் ஆகியவற்றைப் படிக்கலாம்.

    கணவன், மனைவி இருவருமே செய்யத்தக்க விரதம் இது.

    பகலில் உபவாசம் இருந்து இரவில் ஸ்ரீ கிருஷ்ணனைப் பூஜித்து, அவரது சரிதத்தைக் கேட்டு கண் விழிப்பார்கள்.

    பாகவதத்தில் கிருஷ்ணனின் அவதாரக் கட்டத்தைக் கேட்பதும், பாராயணம் செய்வதும், பாகவதம் கேட்பதும் மிகவும் புண்ணியமாகும்.

    கண்ணன் மேல் மிகவும் மனதை பறிகொடுத்து விரதம் இருப்பவர்களுக்கு மங்களகரமான பலன்கள் அனைத்தும் கைகூடும்.

    குழந்தை செல்வம் தருவதுடன் சகல சவுபாக்கியங்களையும் அருளி முக்தி நலத்தையும் கண்ணன் நல்குவான்.

    ×