என் மலர்
நீங்கள் தேடியது "நடமாடும் வண்டி"
- நடமாடும் காய்கனி விற்பனை வண்டி மற்றும் பழக்கன்றுகள் தொகுப்பு வழங்கப்பட்டது.
- காய்கனி விற்பனை வண்டி ரூ.15000 மானியத்தில் இலவசமாக வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் வட்டாரத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் நடமாடும் காய்கனி விற்பனை வண்டி மற்றும் பழக்கன்றுகள் தொகுப்பு வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் டி.கே.ஜி.நீலமேகம் எம்எல்.ஏ. தலைமை தாங்கி பயனாளிகளுக்கு நடமாடும் காய்கனி விற்பனை வண்டி, பழக்கன்றுகள் தொகுப்பு ஆகியவற்றை வழங்கினார்.
தோட்டக்கலை துறையின் மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் காய்கனி விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு நடமாடும் காய்கனி விற்பனை வண்டி ரூ.15000 மானியத்தில் இலவசமாக 11 நபர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் வட்டாரத்தில் 12 கிராமங்கள் 2023-24 ஆம் ஆண்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அவற்றில் ஒரு கிராமத்திற்கு தலா 300 வீதம், ஒரு தொகுப்பிற்கு ரூ. 150 மதிப்பில் 75 சதவீத மானியமாக பழக்கன்று தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. உழவர் சந்தையை சுற்றியுள்ள கிராமங்களில் காய்கறி சாகுபடி பரப்பினை அதிகரிக்க 75 சதவீதம் மானியத்தில் ரூ.10000 மதிப்பில் இடுப்பொருட்கள் வழங்கப்பட்டது.
மேலும் மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மாடித்தோட்டம் அமைப்பதற்கு ரூ .900 மதிப்புள்ள 6 செடி வளர்க்கும் பைகள், 12 கிலோ தேங்காய் நார்கள், 6 காய்கறி விதைகள், அசோஸ்பைரில்லம், சூடோமோனாஸ் மற்றும் வேப்பெண்ணெய் ஆகியவை 50 சதவீதம் ரூ. 450 மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது என்று தோட்டக்கலைதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலை உதவி இயக்கு நர்கள் முத்தமிழ்ச்செல்வி, கனிமொழி, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் வெங்கடாசலபதி, தர்மதுரை, ராஜ்குமார், கரிகாலன், பாக்கியராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.






