என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டார் கேபிள் வயர்கள்"

    • அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி இந்திய நாதன் என்பவரது விவசாய தோட்டத்திலும் சுமார் 900 அடி கேபிள் வயர் திருடப்பட்டு உள்ளது.
    • போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு இது போன்ற சம்பவங்களை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அக்கணம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50). இவரது விவசாய தோட்டத்தில் சுமார் 100 அடி நீளமுள்ள மின்சார மோட்டாரின் கேபிள் வயரை மர்ம நபர்கள் சிலர் வெட்டி திருடிச் சென்றுள்ளனர். இதே போல அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி இந்திய நாதன் என்பவரது விவசாய தோட்டத்திலும் சுமார் 900 அடி கேபிள் வயர் திருடப்பட்டு உள்ளது. விவசாயிகள் இருவரும் பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள விவசாய தோட்டங்களில் மின் மோட்டாரில் மாட்டியிருக்கும் வயர்கள் திருட்டுப் போவது தொடர்கதையாக உள்ளது என்றும், போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு இது போன்ற சம்பவங்களை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×