என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சம்பங்கி பூக்கள்"

    • கடந்த 3 நாட்களாக ஒரு கிலோ சம்பங்கி பூக்கள் ரூ.10-க்கு விற்பனையானது.
    • பூக்களை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிட்டால் மறுபடியும் பூ பூக்காது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர், புஞ்சை புளியம்பட்டி சுற்று வட்டார கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் ரோஜா, மல்லிகை, கனகாம்பரம், சம்பங்கி பூக்கள் பயிரிடப்படுகின்றன. நாள்தோறும் 5 டன் பூக்களுக்கு மேல் விளைகிறது. அவைகளை விவசாயிகள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கிறார்கள்.

    சத்தியமங்கலம் , பவானிசாகர், புளியம்பட்டி பகுதிகளில் கொள்முதல் செய்யப்படும் பூக்கள் வெளி மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் பூக்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது.

    குறிப்பாக சம்பங்கி பூக்கள் விளைச்சல் 2 மடங்கு அதிகரித்துள்ளது. திருமண சீசன் போது கிலோ ரூ.500-க்கு விற்பனையான சம்பங்கி பூக்கள் கடந்த சில வாரங்களாக கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ 50 ரூபாயாக சரிந்தது. இதற்கிடையே கடந்த 3 நாட்களாக ஒரு கிலோ சம்பங்கி பூக்கள் ரூ.10-க்கு விற்பனையானது.

    இதனால் கடும் வேதனை அடைந்த விவசாயிகள் விரக்தி காரணமாக சம்பங்கி பூக்களை பறித்து வாகனங்களில் ஏற்றிக் கொண்டு நீரோடைகளில் டன் கணக்கில் கொட்டி வருகிறார்கள். இது குறித்து விவசாயிகள் கூறும்போது, சம்பங்கி பூக்கள் விலை திடீரென வீழ்ச்சி அடைந்துள்ளது.

    இதை பயிரிட ஆயிரம் கணக்கில் செலவு செய்தோம். தற்போது சம்பங்கி பூ விலை கிலோ ரூ.10-க்கு சரிந்துள்ளதால் நாங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். பூக்களை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிட்டால் மறுபடியும் பூ பூக்காது. தற்போது 10 டன் சம்மங்கி பூக்களை பறித்து ஓடைகளில் கொட்டி அழித்து வருகிறோம் என்று வேதனையுடன் கூறினர். மேலும் எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சம்பங்கி பூக்களின் தேவை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் விசுவாசபுரம் பகுதி விவசாயிகள் நிலங்களில் சம்பங்கி மலர் விதை கிழங்குகளை விதை க்கும் பணியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • ஒருவேளை மழை பொய்த்துப் போனாலும் சம்பங்கி பூக்கள் விளைச்சல் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக சொட்டுநீர் பாசன முறையை கையாண்டு விவ சாயம் செய்து வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மீனாட்சிபுரம், விசுவாசபுரம் சுற்றுப்பகுதி களில் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு வரை கடுமையான வெப்பம் நிலவி வந்தது. இதனால் பூக்கள் உற்பத்தி மிகவும் குறைந்து செடிகள் அனைத்தும் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதனிடையே போடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஒரு சில நாட்களாக பெய்த மழை காரணமாக விவசாயி கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தற்போது விசுவாசபுரம் பகுதியில் வெள்ளை நிற சம்பங்கி மலர்கள் பயிரிடப்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களில் விநாயகர் சதுர்த்தி தொடங்கி பண்டிகை நாட்கள், முகூர்த்த நாட்கள், விசேஷ நாட்களும் கோவில் திருவிழாக்களும் தொடர்ந்து வருவதால் பூக்களின் தேவை அதிகரித்து உள்ளது. இதனால் சம்பங்கி பூக்களின் தேவை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் விசுவாசபுரம் பகுதி விவசாயிகள் நிலங்களில் சம்பங்கி மலர் விதை கிழங்குகளை விதை க்கும் பணியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    ஒருவேளை மழை பொய்த்துப் போனாலும் சம்பங்கி பூக்கள் விளைச்சல் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக சொட்டுநீர் பாசன முறையை கையாண்டு விவ சாயம் செய்து வருகின்றனர்.

    செடிகளைச் சுற்றி களைகள் ஏற்படாமல் இருப்பதற்காகவும் உற்பத்தி செலவுகளை குறைக்கும் வகையிலும் சம்பங்கி பூக்கள் பயிரிடப்படும் நிலம் முழுவதும் தார் பாய்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பாய்களில் துளைகள் இடப்பட்டு சம்பங்கி விதை கிழங்குகள் விதைக்கப்பட்டு நவீன முறையில் விவசாயம் செய்து வருகின்றனர்.

    இதனால் செடிகளில் களைகள் ஏற்படுவது தவிர்க்கப்படும் .மேலும் தொழிலாளர்கள் தேவையும் குறையும் என்பதால் இதுபோன்ற யுக்தியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    ×