என் மலர்
முகப்பு » slug 354195
நீங்கள் தேடியது "சந்தனக்குடம்"
- சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், ரவ்லா ஷரீபில் சந்தனம் பூசி தப்ரூக் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
- சந்தனக்குடம் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று தர்காவை வந்தடைந்தது.
மெலட்டூர்:
பாபநாசம் அருகே வடக்குமாங்குடி வஞ்சுவழி பள்ளிவாசலில் உள்ள ஹஜ்ரத் அஷ்ஷெய்க் சைய்யது முகமது இனாயத்துல்லா தர்ஹாவின் கந்தூரி உற்சவம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அஷ்ஷெய்கு பதர் மலங்கு சாஹிபு வலியுல்லாஹ்வுக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், ரவ்லா ஷரீபில் சந்தனம் பூசி தப்ரூக் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
மேலும் பள்ளிவாசல் தர்காவில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட சந்தனக்குடம் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று, ரவ்லா ஷரீபில் பாத்திஹா ஓதி மீண்டும் பள்ளிவாசல் தர்காவை வந்தடைந்தது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை வடக்கு மாங்குடி ஜமாத்தலைவர் மற்றும் நிர்வாகிகள், ஜமாத்தார்கள், முனாபிக்கத்துல் அனாம் சங்கம், காயிதே மில்லத் படிப்பகம் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
×
X