என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்தது"

    • ஒரு தனியார் நிறுவனத்தில் டிராக்டர் ஓட்டி வந்துள்ளார்
    • அந்த வழியாக வந்த கார் டிராக்டர் மீது மோதியது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அருகே உள்ள ஓலப்பாளையம், ராம்நகர் காலனியை சேர்ந்தவர் ரங்கசாமி(வயது 60). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் டிராக்டர் ஓட்டி வந்துள்ளார். நேற்று காலை ஓலப்பாளையம் அருகே டிராக்டர் ஓட்டிச் சென்றபோது அந்த வழியாக வந்த கார் டிராக்டர் மீது மோதியது. இதில் டிராக்டர் கவிழ்ந்தது.

    இதில் ரங்கசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் ரங்கசாமியை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு டிரைவர் ரங்கசாமி இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

    இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், காரில் பயணம் செய்த நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஞானசேகரன், விஜயலட்சுமி ஆகியோர் சிறு காயத்துடன் உயிர் தப்பினர்.

    ×