என் மலர்
நீங்கள் தேடியது "சிறப்பு தீர்மானம்"
- மேயர், துணை மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்கிட அரசாணையைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- சிறப்புத் தீர்மானம் மேயரால் முன்மொழியப்பட்டு 100-வது மாமன்ற உறுப்பினர் கார்த்திகேயனால் வழிமொழியப்பட்டது.
கோவை,
கோவை மாநகராட்சியில் நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அந்த தீர்மானத்தில், உள்ளாட்சியிலும் நல்லாட்சி நடைபெறவேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் சேவையில் முழு ஈடுபாடு கொண்டு, தங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு சேவையாற்ற ஊக்கம் தரும் வகையில், மேயர், துணை மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் முறையே மேயருக்கு ரூ.30,000, துணை மேயருக்கு ரூ15,000, மாமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.10,000 மதிப்பூதியம் வழங்கிட, அரசாணையைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் புதிய உத்வேகத்துடன் மக்கள் பணியாற்ற பொன்னான வாய்ப்பினை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவிப்பதில் இம்மாமன்றம் பெருமகிழ்ச்சி அடைகிறது.
இந்த சிறப்புத் தீர்மானம் மேயரால் முன்மொழியப்பட்டு 100-வது மாமன்ற உறுப்பினர் இரா.கார்த்திகேயனால் வழிமொழியப்பட்டது. இந்த சிறப்புத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.






