என் மலர்
நீங்கள் தேடியது "அமைக்கப்படுமா?"
- சேலம் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக லாரி தொழில் முக்கிய இடம் வகிக்கிறது .
- தமிழகத்தில் நாமக்கல்லுக்கு அடுத்தப்படியாக சேலத்தில் அதிக அளவில் லாரிகள் இயக்கப்படுகிறது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக லாரி தொழில் முக்கிய இடம் வகிக்கிறது . தமிழகத்தில் நாமக்கல்லுக்கு அடுத்தப்படியாக சேலத்தில் அதிக அளவில் லாரிகள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் இருந்து நாடு முழுவதும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படுகின்றன.
லாரிகள்
குறிப்பாக சேலத்தில் இருந்து ஜவ்வரிசி, இரும்பு தளவாடங்கள், கல் மாவு, துணி வகைகள் வடமாநிலங்களுக்கு அதிக அளவில் கொண்டு செல்லப்படுகின்றன. வட மாநிலங்களில் இருந்து வெங்காயம், பூண்டு, பருப்பு, துணி வகைகள், மசாலா பொருட்கள், மளிகை ,சாமான்கள் அதிக அளவில் சேலம் மாவட்டத்திற்கு கொண்டுவரப்படுகின்றன.
இதனை நம்பி டிரைவர்கள், கிளீனர்கள் சுமை தூக்கும் தொழிலாளர்கள், புக்கிங் ஏஜென்ட்கள். உதிரிபாகக் கடைகள், பெட்ரோல் பங்குகள், லாரி பட்டறைகள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். சரக்கு போக்குவரத்தில் லாரிகள் முக்கிய இடம் வகித்து வருகிறது.
இடவசதி இல்லை
ஆனால் லாரிகள் நிறுத்துவதற்கு சேலத்தில் போதுமான இட வசதிகள் இல்லாததால் லாரி டிரைவர்கள் தினமும் புலம்பி வருகிறார்கள். குறிப்பாக சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான லாரிகள் சேலம் செவ்வாப்பேட்டை லாரி மார்க்கெட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த லாரிகள் நிறுத்துமிடத்தில் கழிப்பிட வசதிகள் குடிநீர் வசதிகள் சரியாக இல்லை. இருக்கும் கழிப்பறைகளும் பூட்டியே கிடக்கின்றன. இதனால் டிரைவர், கிளீனர்கள் அவசரத்துக்கு கூட அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
மேலும் அருகில் ரெயில்வே குட்செட் உள்ளதால் அங்கிருந்து பாம்பு உள்ளிட்ட பூச்சிகளும் வருவதால் டிரைவர் மற்றும் கிளீனர்கள் லாரிகளில் நிம்மதியாக தூங்க முடியவில்லை.சாலையோரம் நிறுத்தினாலும் லாரிகளில் பொருட்கள் திருட்டு போகிறது.
இதனால் செவ்வாய்பேட்டை லாரி மார்க்கெட் பகுதிகளிலேயே லாரிகளை நிறுத்தும் சூழல் உள்ளது. ஆனால் அங்கு போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் டிரைவர்கள் தினம் தினம் இரவு நேரங்களிலும் தூங்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.
கடந்த 2007-ஆம் ஆண்டு லாரி நிறுத்துவதற்கு வசதியாக ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் 15 ஏக்கர் நிலம் பார்வையிடப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் அதன் பின்னர் அந்த திட்டம் கைவிடப்பட்டது. அதன் பின்னரும் ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் லாரி மார்க்கெட் புதிதாக அமைக்கப்படும் என வாக்குறுதிகள் அளிக்கப்படுகிறது. ஆனால் இதுவரை அந்த திட்டம் நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் காணல் நீராக காட்சியளிக்கிறது.
இதனால் லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் லாரிகள் நிறுத்த நவீன வசதிகளுடன் புதிய இடம் வழங்க வேண்டும் என்ற குரல் 20 ஆண்டுகளாக ஒலித்து வருகிறது .
இது குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் தன்ராஜ் கூறியதாவது சேலத்தில் லாரி மார்க்கெட் அமைக்க வேண்டும் என்பது 20 ஆண்டுகால கோரிக்கையாகும்.வீரபாண்டி ஆறுமுகம் அமைச்சராக இருந்தபோது 15 ஆண்டுகளுக்கு முன்பு ஜாகிர் அம்மாபாளையத்தில் சேகோ சர்வ் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் பின்னர் நிறைவேற்றப்படாமல்.
திட்டம் கைவிடப்பட்டது நாங்களும் பலமுறை லாரி மார்க்கெட் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து விட்டோம். ஆனால் அதனை யாரும் இதுவரை கண்டு கொள்ளவில்லை. இதனால் லாரிகளை நிறுத்துவதற்கு சேலத்தில் சரியான இடம் இல்லாமல் லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் தவித்து வருகிறார்கள் . எனவே எங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சேலத்தில் லாரி நிறுத்த நவீன லாரிமார்க்கெட் அமைத்து இதற்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பது ஒட்டுமொத்த லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களின் கோரிக்கையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- குமாரபாளையம் அருகே சேலம் - கோவை புற வழிச்சாலை கோட்டைமேடு பகுதியில் மேம்பாலம் இல்லாததால்,
- அதிக உயிரி ழப்புகள் ஏற்பட்டன. பொது மக்கள் போராட்டத்தை யடுத்து அங்கு மேம்பாலம் கட்டப்பட்டது.
குமாரபாளையம்:
குமாரபாளையம் அருகே சேலம் - கோவை புற வழிச்சாலை கோட்டைமேடு பகுதியில் மேம்பாலம் இல்லாததால், அதிக உயிரி ழப்புகள் ஏற்பட்டன. பொது மக்கள் போராட்டத்தை யடுத்து அங்கு மேம்பாலம் கட்டப்பட்டது.
அதே போல் அதிக மக்கள்,ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாண வியர் சாலையை கடக்கும் பகுதியாக கத்தேரி பிரிவு பஸ் நிறுத்தம் பகுதி உள்ளது.
தட்டான்குட்டை, வேமன்காட்டுவலசு, சத்யா நகர், ஜெய்ஹிந்த் நகர், உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த சாலை வழியாகத்தான், கடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் இந்த பகுதியில் அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், தனியார் கல்லூரிகள் உள்ள நிலையில் மாணவ, மாணவியர் இந்த சாலையை கடந்து செல்லும் அத்தியாவசியம் ஏற்பட்டு வருகிறது.
மேலும் குமாரபாளையம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் தொழி லாளர்கள் இந்த சாலையை கடந்து செல்கின்றனர். இந்த சாலை வழியாக அதிக வாக னங்கள் சென்று வருகிறது. பொதுமக்கள் இந்த சாலையை கடக்க வெகு நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. குமாரபாளை யம் போலீஸ் நிலையம், போக்கு வரத்து போலீஸ் நிலையங்க ளில் போதிய போலீசார் நியமித்து, பொது மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், இந்த இடத்தின் அத்தியாவசியம் கருதி உடனே மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம்-கோவை புற வழிச்சாலை, கத்தேரி பிரி வில் மேம்பாலம் அமைக்க அளவீடு பணிகளில் ஊழி யர்கள் ஈடுபட்டனர்.இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
2023 ஜூலை இறுதி வாரத்தில் பூமி பூஜை போடப்பட்டு, மேம்பால பணிகள் தொடங்கும் என கூறப்பட்டது. ஆனால் இன்னும் அளவீடு பணிகள் தொடர்ந்து கொண்டே உள்ளது. மேம்பாலம் வருமா, வராதா? என எதிர்பார்ப்பு டன் காத்திருக்கிறோம் . இவ்வாறு அவர்கள் கூறினர்.






