என் மலர்
உள்ளூர் செய்திகள்

குமாரபாளையம் அருகே மேம்பாலம் அமைக்கப்படுமா?
- குமாரபாளையம் அருகே சேலம் - கோவை புற வழிச்சாலை கோட்டைமேடு பகுதியில் மேம்பாலம் இல்லாததால்,
- அதிக உயிரி ழப்புகள் ஏற்பட்டன. பொது மக்கள் போராட்டத்தை யடுத்து அங்கு மேம்பாலம் கட்டப்பட்டது.
குமாரபாளையம்:
குமாரபாளையம் அருகே சேலம் - கோவை புற வழிச்சாலை கோட்டைமேடு பகுதியில் மேம்பாலம் இல்லாததால், அதிக உயிரி ழப்புகள் ஏற்பட்டன. பொது மக்கள் போராட்டத்தை யடுத்து அங்கு மேம்பாலம் கட்டப்பட்டது.
அதே போல் அதிக மக்கள்,ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாண வியர் சாலையை கடக்கும் பகுதியாக கத்தேரி பிரிவு பஸ் நிறுத்தம் பகுதி உள்ளது.
தட்டான்குட்டை, வேமன்காட்டுவலசு, சத்யா நகர், ஜெய்ஹிந்த் நகர், உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த சாலை வழியாகத்தான், கடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் இந்த பகுதியில் அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், தனியார் கல்லூரிகள் உள்ள நிலையில் மாணவ, மாணவியர் இந்த சாலையை கடந்து செல்லும் அத்தியாவசியம் ஏற்பட்டு வருகிறது.
மேலும் குமாரபாளையம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் தொழி லாளர்கள் இந்த சாலையை கடந்து செல்கின்றனர். இந்த சாலை வழியாக அதிக வாக னங்கள் சென்று வருகிறது. பொதுமக்கள் இந்த சாலையை கடக்க வெகு நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. குமாரபாளை யம் போலீஸ் நிலையம், போக்கு வரத்து போலீஸ் நிலையங்க ளில் போதிய போலீசார் நியமித்து, பொது மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், இந்த இடத்தின் அத்தியாவசியம் கருதி உடனே மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம்-கோவை புற வழிச்சாலை, கத்தேரி பிரி வில் மேம்பாலம் அமைக்க அளவீடு பணிகளில் ஊழி யர்கள் ஈடுபட்டனர்.இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
2023 ஜூலை இறுதி வாரத்தில் பூமி பூஜை போடப்பட்டு, மேம்பால பணிகள் தொடங்கும் என கூறப்பட்டது. ஆனால் இன்னும் அளவீடு பணிகள் தொடர்ந்து கொண்டே உள்ளது. மேம்பாலம் வருமா, வராதா? என எதிர்பார்ப்பு டன் காத்திருக்கிறோம் . இவ்வாறு அவர்கள் கூறினர்.






