என் மலர்
நீங்கள் தேடியது "கத்தியுடன் வந்த நபர்"
- கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
- வீட்டு தேவைக்காக புதிதாக காய்கறி வெட்டும் கத்தியை வாங்கியுள்ளார்.
கோவை,
கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது.
இதில் ஏராளமான பொதுமக்கள், அரசியல் அமைப்பினர், விவசாயிகள் உள்ளிட்ட பலர் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.
கலெக்டர் அலுவலகம் வருவோரை போலீசார் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதி வருகின்றனர்.
அதன்படி இன்று வந்தவர்களையும் போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த வாலிபர் ஒருவரை போலீசார் சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அதில் புதிதாக வாங்கப்பட்ட காய்கறி வெட்டு கத்தி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த நபரிடம் எதற்காக கத்தியுடன் வந்தீர்கள் என விசாரணை நடத்தினர். அவர், டவுன்ஹால் பகுதியில் வீட்டு தேவைக்காக புதிதாக காய்கறி வெட்டும் கத்தியை வாங்கியுள்ளதாகவும், மனு அளித்துவிட்டு வீட்டிற்கு செல்ல உள்ளதாகவும் கூறினார். போலீசார் அவரிடம் இருந்த கத்தியை பெற்றுக்கொண்டு உள்ளே மனு அளிக்க அனுமதி அளித்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.






