என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஞ்சாவுடன் கைது"

    • மகேஸ்வரி கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
    • அவரிடம் இருந்த கஞ்சாவை பவானி போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    பவானி:

    பவானியில் கஞ்சா பொருட்கள் விற்பனை செய்ய கொண்டு வரப்ப டுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    சம்பவத்தன்று பவானி போலீசார் புதிய பஸ் நிலையம் அருகில் சந்தே கத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டி ருந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    அவர் பவானி காவேரி வீதி, கந்தன் பட்டறை பின்புறம் பகுதியில் வசிக்கும் விஜயன் என்கிற விஜயகுமார் மனைவி மகேஸ்வரி (26) என்பதும், அவர் கஞ்சா விற்பனை செய்யும் வகையில் 1½ கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து மகேஸ்வரி கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறைச்சா லையில் அடைக்கப்பட்டார். மேலும் அவரிடம் இருந்து 1½ கிலோ கஞ்சாவை பவானி போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    ×