என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரா அமைப்பு"

    • ஜூலை 1ஆம் தேதி RAW ஏஜென்சி தலைவராக பராக் ஜெயின் பதவியேற்கிறார்.
    • பராக் ஜெயின் 2 ஆண்டுகளுக்கு அந்த பதவியில் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் ரா எனப்படும் உளவு அமைப்பின் தலைவராக பதவி வகித்து வரும் ரவி சின்ஹாவின் பதவிக்காலம் நடப்பு ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

    இந்நிலையில், ரா உளவு அமைப்பின் புதிய தலைவராக பராக் ஜெயின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ஜூலை 1ஆம் தேதி RAW ஏஜென்சி தலைவராக பதவியேற்கும் பராக் ஜெயின் 2 ஆண்டுகளுக்கு அந்த பதவியில் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    1989 ஆண்டு IPS அதிகாரியாக பணியில் சேர்ந்த பராக் ஜெயின், ரா உளவு அமைப்பில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐ.எஸ்.ஐ.- ரா இணைந்து செயல்பட்டால் பயங்கரவாதத்தை குறைக்க முடியும்.
    • இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா முக்கிய பங்காற்றியது.

    பாகிஸ்தான்- இந்தியா இடையிலான புலனாய்வு அமைப்புகளின் ஒத்துழைப்பு, தெற்காசியாவில் குறிப்பிடத்தகுந்த வகையில் பயங்கரவாதத்தை குறைக்கும் என பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான பிலாவல் பூட்டோ-சர்தாரி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பிலாவல் கூறியதாவது:-

    ஐ.எஸ்.ஐ. (பாகிஸ்தான் புலனாய்வு). ரா (RAW- இந்திய புலனாய்வு) பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒன்றிணைந்து பணியாற்ற தயாராக இருந்தால், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் போதுமான அளவு பயங்கரவாதம் குறைவதை நம்மால் பார்க்க முடியும. இதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.

    இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா முக்கிய பங்காற்றியது. இந்த முதல்படியை நான் வரவேற்கிறேன். ஆனால், இது முதல்படி மட்டும்தான்.

    200 மில்லியன் மக்களின் நீர் விநியோகத்தை துண்டிப்பதாக மிரட்டுவது ஐ.நா. சாசனத்தை மீறுவதாகும். இந்த அச்சுறுத்தல், பாகிஸ்தானால் போர் நடவடிக்கையாக கருதப்படும்.

    இவ்வாறு பிலாவல் பூட்டோ-சர்தாரி தெரிவித்துள்ளார்.

    • சமந்த் குமார் கோயலின் பதவிக்காலம் ஜூன் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
    • ரா அமைப்பின் புதிய செயலாளராக ரவி சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    நாட்டில் ரா எனப்படும் உளவு அமைப்பின் செயலாளர் பதவியை வகித்து வரும் சமந்த் குமார் கோயலின் பதவிக்காலம் நடப்பு ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

    இந்நிலையில், ரா எனப்படும் உளவு அமைப்பின் புதிய செயலாளராக ரவி சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ஐ.பி.எஸ். அதிகாரியான அவர் அமைச்சரவை செயலகத்திற்கான தனி பாதுகாப்பு அதிகாரி மற்றும் சிறப்பு செயலாளராக பணியாற்றி வருகிறார்.

    இதன்படி, ரவி சின்ஹா 2 ஆண்டுகள் அல்லது அடுத்த அறிவிப்பு வெளிவரும் வரை என இவற்றில் எது முதலில் வருகிறதோ அதுவரை பதவியில் தொடருவார் என அமைச்சரவை நியமனங்களுக்கான குழு செயலாளர் தீப்தி உமாசங்கர் தெரிவித்துள்ளார்.

    ×