ரா உளவு அமைப்பின் புதிய செயலாளராக ரவி சின்ஹா நியமனம்

சமந்த் குமார் கோயலின் பதவிக்காலம் ஜூன் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது.ரா அமைப்பின் புதிய செயலாளராக ரவி சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ரா உளவு அமைப்பின் புதிய செயலாளராக ரவி சின்ஹா நியமனம்
Published on

புதுடெல்லி:

நாட்டில் ரா எனப்படும் உளவு அமைப்பின் செயலாளர் பதவியை வகித்து வரும் சமந்த் குமார் கோயலின் பதவிக்காலம் நடப்பு ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், ரா எனப்படும் உளவு அமைப்பின் புதிய செயலாளராக ரவி சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஐ.பி.எஸ். அதிகாரியான அவர் அமைச்சரவை செயலகத்திற்கான தனி பாதுகாப்பு அதிகாரி மற்றும் சிறப்பு செயலாளராக பணியாற்றி வருகிறார்.

இதன்படி, ரவி சின்ஹா 2 ஆண்டுகள் அல்லது அடுத்த அறிவிப்பு வெளிவரும் வரை என இவற்றில் எது முதலில் வருகிறதோ அதுவரை பதவியில் தொடருவார் என அமைச்சரவை நியமனங்களுக்கான குழு செயலாளர் தீப்தி உமாசங்கர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com