RAW உளவு அமைப்பின் புதிய தலைவராக பராக் ஜெயின் நியமனம்

ஜூலை 1ஆம் தேதி RAW ஏஜென்சி தலைவராக பராக் ஜெயின் பதவியேற்கிறார். பராக் ஜெயின் 2 ஆண்டுகளுக்கு அந்த பதவியில் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
RAW உளவு அமைப்பின் புதிய தலைவராக பராக் ஜெயின் நியமனம்
Published on

இந்தியாவின் ரா எனப்படும் உளவு அமைப்பின் தலைவராக பதவி வகித்து வரும் ரவி சின்ஹாவின் பதவிக்காலம் நடப்பு ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், ரா உளவு அமைப்பின் புதிய தலைவராக பராக் ஜெயின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஜூலை 1ஆம் தேதி RAW ஏஜென்சி தலைவராக பதவியேற்கும் பராக் ஜெயின் 2 ஆண்டுகளுக்கு அந்த பதவியில் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1989 ஆண்டு IPS அதிகாரியாக பணியில் சேர்ந்த பராக் ஜெயின், ரா உளவு அமைப்பில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com