என் மலர்
நீங்கள் தேடியது "சூதாடிய 8"
- ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது.
- சீட்டு கட்டுகள், ரூ.1800 பணம் பறி முதல் செய்யப்பட்டது.
ஈரோடு,
கோபிசெட்டிபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் கபிலக்கண்ணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது கோபி அடுத்த கூகலூர், மனுவகாடு, மாரியம்மன் கோவில் அருகே ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது. அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த தேவாமணி (55), சேகர் (42), செந்தில் (49), ஜெயராஜ் தேவேந்தர் (36), தாமோதரன்(27), பூபதி (32), குமரேசன் (32), சதீஷ்(28) ஆகியோர் என தெரிய வந்தது.
இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகள், ரூ.1800 பணம் பறி முதல் செய்யப்பட்டது.