என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீக்குளித்த தொழிலாளி"

    • அந்நியன் சேட் மீது ஏற்கனவே கஞ்சா, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.
    • சப்-இன்ஸ்பெக்டர் அந்நியன் சேட்டை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

    குனியமுத்தூர்,

    கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூ ரை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் என்ற அந்நியன் சேட் (வயது 50). கூலித் தொழிலாளி.

    இவர் மீது ஏற்கனவே கஞ்சா, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.நேற்று இரவு 9.30 மணியளவில் போதையில் இருந்த அந்நியன் சேட் வெள்ளலூரில் உள்ள புறக்காவல் நிலையத்துக்கு சென்றார். அங்கு போத்தனூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கும் ராஜதுரை என்பவர் பணியில் இருந்தார்.

    அப்போது அங்கு சென்ற அந்நியன் சேட் சப்-இன்ஸ்பெக்டரிடம், சந்தோஷ் என்பவர் என்னி டம் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கினார். ஆனால் நீண்ட நாட்களாக அவர் பணத்தை திருப்பி தரவில்லை. எனவே அந்த பணத்தை உடனடியாக வாங்கி கொடுக்க முடியுமா முடியாதா என கேட்டார்.

    அதற்கு சப்-இன்ஸ்பெக்டர் போதையில் உளராதே என கூறி அந்நியன் சேட்டை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். வீட்டிற்கு சென்ற அவர் பெட்ரோல் பாட்டிலுடன் மீண்டும் புறக்காவல் நிலையத்துக்கு வந்தார்.

    அங்கு வைத்து உடலில் பெட்ரோலை ஊற்றி தீ பற்ற வைத்தார். கண்இமைக்கும் நேரத்தில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்நியன் சேட்டை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    ×