என் மலர்
நீங்கள் தேடியது "குடிநீர் சிக்கனம்"
- கோடை காலத்தில் தாராபுரம் நகராட்சி பகுதிக்கு தண்ணீர் வழங்கும் அமராவதி ஆறு வறண்டுள்ளது.
- பொதுமக்கள் சிரமத்தை பார்க்காமல் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி நகராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தாராபுரம்:
தாராபுரம் நகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு நகராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் குறித்து நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
தற்போது கோடை காலத்தில் தாராபுரம் நகராட்சி பகுதிக்கு தண்ணீர் வழங்கும் அமராவதி ஆறு வறண்டுள்ளது. இதனால் ஆற்றில் உள்ள குடிநீர் கிணற்றில் தண்ணீர் அளவு குறைந்துள்ளது. இதனால் நகராட்சி பகுதிக்கு தினசரி நகராட்சி நிர்வாகம் மூலம் வழங்கப்பட்டு வந்த தண்ணீர் 15 வார்டுகளுக்கு ஒரு நாளும், அடுத்த நாள் 15 வார்டுகளுக்கு என குடிநீர் வினியோகம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் 15 வார்டுகளாக பிரித்து குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல குடியிருப்பு பகுதியில் அமைத்துள்ள ஆழ்துளை கிணறுகளில் உள்ள தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அதேபோல அமராவதி ஆற்றில் இருந்து நகராட்சி மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரையும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேலும் தாராபுரம் நகராட்சி பகுதிக்கு தண்ணீர் பிரச்சினை தீர்க்க அமராவதி அணையில் இருந்து குடிநீருக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என நகராட்சி தலைவர் என்ற முறையில் முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். அதனை ஏற்று கூடிய விரைவில் அமராவதி அணையில் இருந்து தாராபுரம் பகுதிக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பாக்கிறேன்.
இந்த அறிவிப்பை பயன்படுத்தி 15 வார்டுகளுக்கு ஒரு நாளும், அடுத்த நாள் அடுத்த 15 வார்டுகளுக்கும் என மாறி மாறி தண்ணீர் வினியோகிக்க முடிவு செய்துள்ளோம். பொதுமக்கள் சிரமத்தை பார்க்காமல் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி நகராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






