என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சாரம் worker"

    • மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியனார்.
    • வீட்டில் பழுதடைந்த சுவிட்ச் போர்டை சரி செய்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வினோபாஜி தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது49). அலுமினிய கதவு, ஜன்னல் செய்யும் தொழிலாளி.

    இவா் நேற்று வீட்டில் பழுதடைந்த சுவிட்ச் போர்டை சரி செய்தாா். அப்ேபாது அவரை எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிேசாதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ×