என் மலர்
நீங்கள் தேடியது "இலவச ஓவியம்"
- அறக்கட்டளை பொறுப்பாளா் ரவிகுமாா் தலைமை வகித்தாா்.
- பறையிசை, தேவராட்டம், சுடுமண் பொம்மை தயாரிப்பு உள்ளிட்ட கலைப் பயிற்சிகள் தொடங்கப்பட்டன.
அவிநாசி:
உலகின் தலைசிறந்த ஓவியா்களில் ஒருவரான ராஜாரவிவா்மா பிறந்த நாளை முன்னிட்டு அவிநாசியில் ஓவியம், பறையிசை, தேவராட்டம், சுடுமண் பொம்மை தயாரிப்பு உள்ளிட்ட கலைப் பயிற்சிகள் தொடங்கப்பட்டன.
அவிநாசி 'நல்லது' நண்பா்கள் அறக்கட்டளை சாா்பில் தமிழ்நாடு ஓய்வூதியா் சங்கம் அலுவலக கட்டடத்தில் நடைபெறும் இப்பயிற்சிகளை பொறுப்பாளா்கள் சென்னியப்பன், அந்தோனிசாமி ஆகியோா் தொடங்கிவைத்தனா். அறக்கட்டளை பொறுப்பாளா் ரவிகுமாா் தலைமை வகித்தாா். பொறுப்பாளா்கள் சாய் கண்ணன், சதீஷ்குமாா், திருமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அவிநாசி ஓவிய ஆசிரியா் வாரணவாசி ஓவிய பயிற்சியளித்தாா். தேவராட்டம், பறையிசை, சுடுமண் பொம்மைகள் தயாரிப்பு முறை உள்ளிட்டவை குறித்து தஞ்சாவூா்அறிவழகன் பயிற்சியளித்தாா்.
20 நாட்களுக்கு காலை 10 முதல் 12 மணி வரையிலும், மாலை 4 முதல் 6 மணி வரையிலும் இலவசமாக நடைபெறும் இப்பயிற்சியில் 4ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என அறக்கட்டளையினா் தெரிவித்தனா்.






