என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளித்தேர்"

    • பிரான்மலையில் ஜெயந்தன் பக்தர்கள் விழாவில் வெள்ளி தேர் இழுத்து வழிபாடு நடத்தினர்.
    • உமாபதி சிவாச்சாரியார் பூஜைகளை செய்தார்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலையில் திருக்கொடுங்குன்ற நாதர் கோவில் உள்ளது. ஆகாயம், மத்திமம், பாதாளம் என்ற 3 நிலைகளில் பெருமாள் காட்சியளிக்கின்றார்.

    பாதாளத்தில் திருக்கொடுங்குன்ற நாதர் குயில் அமுத நாயகி அம்மனும், மத்திமத்தில் வடுகபைரவர் விஸ்வரூப தரிசனத்திலும், ஆகாயத்தில் மங்கைப்பாகர் தேனம்மை ஆகியோர் காட்சி அளிக்கின்றனர்.

    மத்திமத்தில் தெற்கு திசை நோக்கி விஸ்வரூப தரிசனமாக காட்சியளிக்கும் வடுகபைரவருக்கு ஆண்டுக்கு இருமுறை விழாக்கள் நடைபெறும். குமார சஷ்டி விழா கார்த்திகை மாதத்திலும், ஜெயந்தன் பூஜை விழா சித்திரை மாத அமாவாசை தினத்திலும் நடைபெறுவது வழக்கம்.

    கடந்த காலங்களில் வடுகபைரவர் ஜெயந்தன் விழாவை முன்னிட்டு வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வருவர். கடந்த வருடம் ரூ.80 லட்சம் செலவில் வெள்ளித்தேர் வடிவ மைக்கப்பட்டது. நேற்று வெள்ளித்தேர் பவனி நடந்தது.

    உற்சவர் வடுகபைரவர் தேரில் எழுந்தருளி அருள் பாலித்தார். தீப ஆரத்திகள் நிறைவு பெற்று வெள்ளி ரதத்தில் உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

    திரு விழா ஏற்பாடுகளை திருக்கைலாய பரம்பரை திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி அடிகளார் ஏற்பாடு செய்திருந்தார். பரம்பரை ஸ்தானிகம் உமாபதி சிவாச்சாரியார் பூஜைகளை செய்தார்.

    ×